துபாயில் நடந்த ராபிள் என்னும் குலுக்கல் போட்டியில், இந்தியாவை சேர்ந்த ஒருவர் $1 மில்லியன் வென்றார். அவரைத் தவிர வேறு மூன்று வெளிநாட்டவர்கள் சொகுசு வாகனங்களை வென்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் கான்கோர்ஸ் சியில் புதன்கிழமை நடைபெற்ற சமீபத்திய துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லினியர் குலுக்கல் போட்டியி ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர் $1 மில்லியனை வென்றுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 7.5 கோடியாகும். 


அபுதாபியில் வசிக்கும் 50 வயதான இந்தியரான ரியாஸ் கமாலுதீன், மே 27 அன்று ஆன்லைனில் வாங்கிய டிக்கெட் எண் 4330 மூலம் மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 391 (Millennium Millionaire Series 391) என்னும் குலுக்கல் போட்டியில், $1 மில்லியன் வென்ற வெற்றியாளர் ஆனார்.


ரேஃபிள் என்பது லாட்டரி டிக்கெட்டை போன்றதாகும். இதில் எண்ணிடப்பட்ட டிக்கெட்டுகளை வாங்கும் போது, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பவர்களுக்கு பரிசுகள் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட டிக்கெட்டுகள், சரிபார்க்கப்பட்டு, டிக்கெட்டை வைத்திருப்பவர் பரிசை வெல்வார்.


15 ஆண்டுகளாக துபாய் டூட்டி ஃப்ரீயின் விளம்பரத்தில் தொடர்ந்து பங்கேற்கும், கமாலுதீன் தனது ஆறு சகாக்கள் மற்றும் நண்பர்களுடன் டிக்கெட்டை வாங்கினார். 25 ஆண்டுகளாக அபுதாபியில் வசிக்கும் கமாலுதீன் இரண்டு குழந்தைகளின் தந்தை. அவர் விமான நிறுவனத்தில் பணிபுரிகிறார்.


மேலும் படிக்க | அபுதாபியில் 1 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசை வென்ற மதுரையை சேர்ந்த ஊழியர்


"கடந்த 15 ஆண்டுகளாக டிகெட்டுகளை தொடர்ந்து வாங்கி வருகிறேன். எங்கள் அதிர்ஷ்டம் அடிக்குமா என்பதை தொடர்ந்து சோதித்து வருகிறோம், இறுதியாக நாங்கள் வெற்றி பெற்றோம்! இறைவனுக்கு நன்றி, துபாய் டூட்டி ஃப்ரீக்கு நன்றி!” என அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


1999 ஆம் ஆண்டு மில்லினியம் மில்லினியம் ப்ரோமோஷன் தொடங்கியதில் இருந்து முதல் பரிசை வென்ற 191வது இந்திய நாட்டவர் கமாலுதீன் ஆவார். துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிக்கெட் வாங்குபவர்களில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Millennium Millionaire குலுக்கல் போட்டியில், தொடர்ந்து, மூன்று சொகுசு வாகனங்களுக்கான Finest Surprise குலுக்கல் போட்டியும் நடத்தப்பட்டது. அதில், துபாயில் வசிக்கும் 36 வயதான அல்ஜீரிய நாட்டவரான முகமது அஸ்கோரி, மே 18 அன்று ஆன்லைனில் வாங்கிய ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 1806 இன் டிக்கெட் எண் 0887 உடன் பென்ட்லி ஃப்ளையிங் ஸ்பர் வி8 (ஓனிக்ஸ்) காரை வென்றார்.


இவரும் 2020 ஆம் ஆண்டு முதல் துபாய் டூட்டி ஃப்ரீ ப்ரோமோஷனில் தொடர்ந்து பங்கேற்பவர், அஸ்கோரி 1806 சீரிஸ் எண்களில் மூன்று டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். விரைவில் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கும் அஸ்கோரி, துபாய் ஏர்போர்ட் ஃப்ரீ ஸோனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மூத்த விற்பனை மேலாளராகப் பணிபுரிகிறார்.


“இந்த அற்புதமான வெற்றியை கொடுத்த துபாய் டூட்டி ஃப்ரீக்கு நன்றி! எனது கனவு காரை நான் வென்றேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.


ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பாகிஸ்தானியரான எஹ்சான் நசீர், மே 11 அன்று ஆன்லைனில் வாங்கிய ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 499 தொடரின் டிக்கெட் எண் 0133 உடன் BMW F 900 XR (பிளாக் ஸ்ட்ரோம் மெட்டாலிக்) மோட்டார் பைக்கை வென்றார்.


மேலும் படிக்க | அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு எச்சரிக்கை: சிம் கார்டில் இந்த தவறை செய்யாதீர்கள்
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR