வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முக்கிய செய்தி!! வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் வீடு கட்ட, வீட்டுக்கடன் வாங்க விரும்பினால், அதற்கான செயல்முறை என்ன? அவர்கள் எந்தெந்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்? கடனை விரைவாக பெறுவது எப்படி? இந்த கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் வீடு கட்ட / வாங்க, கடன் வாங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ), கடனை விரைவாகப் பெற, பின்வரும் செயல்முறைகளை மனதில் கொள்ள வேண்டும். கடன் பெறும் செயல்முறையில் மிக முக்கிய பங்கு ஆவணங்களுக்கும் உள்ளது. எந்த வித பிரச்சனையும் இல்லாமல் கடன் பெற, குறிப்பிட்ட ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பது உங்களுக்கு நன்மை தரும். உங்கள் நேரம் வீணாகாமல் விரைவில் பணிகள் நடந்துமுடியும். 


விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தல்: 


கடனுக்கு விண்ணப்பிக்கும் என்ஆர்ஐ விண்ணப்பதாரர், அனைத்து விண்ணப்பதாரர்களின் புகைப்படங்களுடன் கையொப்பத்துடன் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவத்தை வழங்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிடுவதற்கும், இது தொடர்பாக வங்கியுடன் தொடர்புகொள்வதற்கும் ஒரு இந்தியக் குடியிருப்பாளருக்கு அங்கீகாரம் வழங்க சட்டப்பூர்வமான பவர் ஆஃப் அட்டர்னி (POA) ஆவணம் தேவை.


பவர் ஆஃப் அட்டர்னி: 


உங்கள் சார்பாக சொத்து பரிவர்த்தனையை முடிக்க, இந்தியாவில் வசிக்கும் மற்றொரு நபரை பவர் ஆஃப் அட்டர்னி (PoA) அங்கீகரிக்கிறது. நீங்கள் வசிக்கும் நாட்டில் தூதரக அதிகாரி அல்லது நோட்டரி முன்னிலையில் இந்த PoA யில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். இது அவர்களால் சான்றளிக்கப்பட வேண்டும். மேலும் அது செல்லுபடியாகும் வகையில் இந்தியாவில் உள்ள ஒரு துணைப் பதிவாளர் அலுவலகத்தில் தீர்ப்பளிக்கப்பட வேண்டும்.


வருமான ஆவணங்கள்: இந்த செயல்முறைக்கு தேவையான ஆவணங்கள் இவை: 


- இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசாவின் நகல். 


- இந்திய பாஸ்போர்ட் இல்லாமல், வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தால் PIO கார்டு. 


- உங்கள் பெற்றோர் இந்திய குடிமக்களாக இருந்தால் OCI கார்டு


- நீங்கள் வசிக்கும் நாட்டின் பணி அனுமதி/வேலை ஒப்பந்தம்/அப்பாய்ண்ட்மெண்ட் கடிதம்


- சமீபத்திய சம்பளச் சான்றிதழ் / கடந்த ஆறு மாதங்களுக்கான ஊதியச் சீட்டு


- சமீபத்திய வருமான வரி அறிக்கைகள்


- ஒரு வருடத்திற்கான NRE மற்றும் NRO கணக்குகளின் வங்கி அறிக்கை


மேலும் படிக்க | பஹ்ரைன் நாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்! 


தலைப்பு ஆவணங்கள்:


- டைட்டில் டீட் (விற்பனையாளரின் பெயரில்). சில மாநிலங்களில் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய குறிப்பிட்ட ஆவணங்கள் உள்ளன. 


- எடுத்துக்காட்டாக, பெங்களூரில் சொத்து வாங்கினால், நீங்கள் கட்டா சான்றிதழை (விற்பனையாளரின் பெயரில்) சரிபார்க்க வேண்டும்.


- அங்கீகரிக்கப்பட்ட கட்டிட பிளான்/கட்டிட அனுமதி


- ஆகுபேஷன் சான்றிதழ் (தயாரான கட்டிடமாக இருந்தால்)


- பழைய உரிமைப் பத்திரங்கள், ஏதேனும் இருந்தால்


- புதுப்பிக்கப்பட்ட என்கம்பரன்ஸ் சான்றிதழ் (encumbrance certificate)


- பங்குச் சான்றிதழ் (cooperative housing society ஆக இருந்தால்)


- சொசைடியிலிருந்து பெறப்பட்ட NOC


- RERA பதிவு (பொருந்தினால்)


மேலும் படிக்க | NRT Day: செந்தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களுக்கான அயலகத் தமிழர் நாள் தொடங்கியது 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ