எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி, ஒரு பொதுத்துறை வங்கியாகும். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு எஸ்பிஐ பல நன்மைகளை வழங்குகிறது. என்ஆர்ஐ-களுக்கு எஸ்பிஐ வழங்கும் நன்மைகளை அணுக, முதலில் வங்கியில் ஒரு கணக்கை திறக்க வேண்டும். நீண்ட க்யூவைத் தவிர்த்து, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வீட்டில் இருந்தேபடியே எஸ்பிஐ-இல் கணக்கைத் தொடங்குவதற்கான சில எளிய வழிகளை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ ஆன்லைனில் என்ஆர்ஐ கணக்கைத் திறப்பதற்கான வழிமுறை: 


- என்ஆர்ஐ கணக்கைத் தொடங்க எஸ்பிஐ இணையதளம் அல்லது மொபைல் ஆப்பிற்கு செல்லவும். 


- மேலே உள்ள பேனலில் இருந்து 'NRI' என்ற டேபைக் கிளிக் செய்யவும்


மேலும் படிக்க | India Visa: இந்தியாவுக்கே உலகிலேயே அதிக விசாக்களை கொடுத்து பிரிட்டன் படைத்த சாதனை 


- அடுத்த கட்டமாக, கணக்குகள் (Accounts) டேபைக் கிளிக் செய்யவும்.


- அடுத்து அகவுண்ட்ஸ் டேபுக்கு கீழ் உள்ள 'Non - Residential External' லிங்கை கிளிக் செய்யவும்.


- பக்கத்தை கீழே ஸ்க்ரோல் செய்து, கணக்கு திறப்பதற்கு விண்ணப்பிக்க, Apply Now என்ற டேபைக் கிளிக் செய்யவும்


- அடுத்த பக்கத்தில், தொடங்குவதற்கு Apply Now என்பதைக் கிளிக் செய்யவும்.


- வாடிக்கையாளர் தகவல் பிரிவின் (Customer Information section) கீழ் Start New என்பதைக் கிளிக் செய்யவும்.


- மேலும் தொடர தேவையான விவரங்களைத் தொடர்ந்து வழங்கவும்.


கணக்கைத் திறக்க தேவையான ஆவணங்கள்


என்ஆர்ஐ கணக்கைத் திறக்க தேவையான அனைத்து ஆவணங்களின் பட்டியல் இதோ: 


- அடையாளச் சான்று (பாஸ்போர்ட்).
- நான்-ரெசிடெண்ட் சான்று (விசா/வேலை அனுமதி போன்றவை)
- வெளிநாட்டு/தொடர்பு முகவரி சான்று (பாஸ்போர்ட், பயன்பாட்டு பில்கள், வாடகை ரசீது போன்றவை)
- நிரந்தர முகவரி (வெளிநாடு/ இந்தியா).
- புகைப்படம்.
- பான் கார்டு.


அட்டெஸ்டேஷன்


ஒருவர் பொதுவான ஆவணங்களை சுய சான்றளித்து (செல்ஃப் அடெஸ்டேஷன்), மேலும் சான்றளிக்க பின்வரும் நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றுக்கு செல்ல வேண்டும்:


- நோட்டரி
- தூதரகம்/உயர் ஆணையம்
- இந்தியன் வங்கியின் வெளிநாட்டுக் கிளை
- இந்திய இருப்புடன் வெளிநாட்டு வங்கி


மேலும் படிக்க | NRI: பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ