சாகசம் செய்து திருட்டை தவிர்த்த இந்தியரை பாராட்டிய துபாய் போலீஸ்
துபாயில் நடக்கவிருந்த கொள்ளை சம்பவம் ஒன்றை இந்தியர் ஒருவர் தடுத்து, குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய உதவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் 2,757,158 திர்ஹம்கள் மதிப்பிலான தொகையை கொள்ளையடிக்க நடத்தப்பட்ட முயற்சியை முறியடித்த துணிச்சலுக்காக துபாய் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் திங்களன்று கேஷூர் கரா சாவாடா கரு கெலா என்ற இந்தியரை பாராட்ட அவரது பணியிடத்திற்கு சென்று அவருக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தனர்.
துபாயின் டாக்டர் மேஜர் ஜெனரல் தாரிக் தஹ்லாக்கின் கூற்றுப்படி, நயிஃப் பகுதியில் இரண்டு ஆசியர்கள் வெவ்வேறு நாணயங்களின் ரொக்கமாக 4,250,000 திர்ஹம்கள் கொண்ட இரண்டு பைகளை எடுத்துச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரதான சந்தேக நபரும் அவரது கூட்டாளிகளும் ஆசியர்களை இடைமறித்து இரண்டு பைகளில் ஒன்றைப் பறித்துச் சென்றதாக அவர் கூறினார். அந்த பையில் 2,757,158 திர்ஹம்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
"இரண்டு ஆசியர்களும் உதவிக்காக கூச்சலிட்டபோது, திரு கேஷூர் கொள்ளையன் திருடப்பட்ட பையுடன் தன்னை நோக்கி ஓடி வருவதை கண்டார். அவர் துணிச்சலாக குற்றவாளியை சமாளித்து, அவருடன் சண்டையிட ஆரம்பித்தார். மேலும், காவல்துறை அதிகாரிகள் வரும் வரை அவரை தரையில் முட்டியிட்ட படி பிடித்து வைத்திருந்தார்" என மேஜர் ஜெனரல் தஹ்லாக் கூறினார்.
தனது அலுவலக சகாக்களுக்கு மத்தியில் துபாய் காவல்துறை தன்னை கவுரவித்தது தனக்கு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்ததாக திரு கேஷூர் தெரிவித்தார். இந்த பதக்கத்தை தான் என்றும் போற்றிப்பாதுகாக்கப் போவதாகவும், இதைப் பெற்றதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.
மேஜர் ஜெனரல் கலீல் இப்ராஹிம் அல் மன்சூரி தலைமையில், குற்றப் புலனாய்வு விவகாரங்களுக்கான உதவித் தலைமைத் தளபதி, மேஜர் ஜெனரல் டாக்டர் அடெல் அல் சுவைடி, ஜெபல் அலி காவல் நிலையத்தின் இயக்குநர், துபாய் காவல் நிலையங்களின் இயக்குநர்கள் குழுவின் இயக்குநர் டாக்டர் மேஜர் ஜெனரல் தாரிக் தஹ்லாக், நயிஃப் காவல் நிலைய இயக்குநர் பர் துபாய் காவல் நிலைய இயக்குநர் பிரிகேடியர் அப்துல்லா காதிம் சொரூர் மற்றும் பல மூத்த அதிகாரிகள் அவரை பாராட்ட அவரது பணியிடத்துக்கு சென்றனர்.
மேஜர் ஜெனரல் அல் மன்சூரி திரு கேஷூரைப் பாராட்டினார். அவர் திருடனைச் சமாளித்து, போலீஸ் ரோந்து வரும் வரை அவரைத் தரையில் அழுத்தி அவரைக் கைது செய்ய காவல்துறைக்கு உதவினார் என்று அவர் கூறினார். மேலும், கேஷூரின் முயற்சியையும், திருடனைத் தடுத்து நிறுத்தும் துணிச்சலையும் அவர் பாராட்டினார். அவரது நடத்தை சமூகத்தின் மீதான அவரது உண்மையான அர்ப்பணிப்பையும், அவசரநிலைகளைக் கையாள்வதில் அவரது புத்திசாலித்தனத்தையும் பிரதிபலிக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேஜர் ஜெனரல் அல் மன்சூரி, திரு கேஷூரை அவரது பணியிடத்திலும், அவரது சக ஊழியர்கள் மற்றும் அண்டை வீட்டார் முன்னிலையிலும் கௌரவிப்பது, சமூக கூட்டாண்மை என்ற கருத்தை வலுப்படுத்துவதிலும், தனிநபர்களிடையே பொறுப்புணர்வை வலுப்படுத்துவதிலும் துபாய் காவல்துறையின் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது என்று விளக்கினார்.
மேலும் படிக்க | NRI News:இந்த ஐக்கிய அரபு அமீரக விசாக்களுக்கு ஸ்பான்சர் தேவையில்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ