UAE: வேலை வாய்ப்புகளை அதிகரித்த தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள்
UAE Labour Law: ஐக்கிய அரபு அமீரகம் சுமார் ஒரு ஆண்டுக்கு முன்னர் புதிய தொழிலாளர் சட்டத்தின் ஒரு பகுதியாக பெரிய சீர்திருத்தங்களை அமல்படுத்தியது.
ஐக்கிய அரபு அமீரகம் தனது புதிய தொழிலாளர் சட்டத்தின் ஒரு பகுதியாக பெரிய சீர்திருத்தங்களை அமல்படுத்தி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. 'தொழிலாளர் உறவுகள் சட்டம் மற்றும் அதன் நிர்வாக ஒழுங்குமுறைகள்' என அழைக்கப்படும் இந்த சீர்திருத்தங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் சந்தையை மேம்படுத்தியுள்ளதாக நிர்வாகம் கருதுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் போட்டித்திறன் மற்றும் உற்பத்தித்திறனை இந்த சட்டம் உயர்த்தியது, வணிகம் செய்வதை எளிதாக்கியது மற்றும் தேசிய மற்றும் சர்வதேச திறமைகளை ஈர்த்தது என்று மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல் அவார் கூறினார்.
இந்த சட்டம் முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் ஒப்பந்த உறவுகளுக்கு பல்வேறு விருப்பங்களை வழங்குகிறது. மற்ற சீர்திருத்தங்களில், முழுநேர மற்றும் பகுதி நேர வேலைகள் தற்காலிக வேலை மற்றும் நெகிழ்வான வேலை நேரம் உட்பட பல வேலை மாடல்களை இந்த சட்டம் அமைக்கிறது. மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (மோஹ்ரே) மாணவர்கள், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் ஃப்ரீலான்ஸர்கள் உட்பட 12 வகையான பணி அனுமதிகளை வழங்கத் தொடங்கியது. ஆய்வுகள் போன்ற புதிய வகைகளும் செயல்படுத்தப்பட்டன.
2021 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டு தனியார் துறை நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கையில் 11 சதவிகித வளர்ச்சியைக் கண்டது. கடந்த ஆண்டு 2.1 மில்லியனுக்கும் அதிகமான பணி அனுமதிகள் வழங்கப்பட்டன. முந்தைய ஆண்டின் 1.5 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 38 சதவிகித வளர்ச்சியாகும்.
மேலும் படிக்க | இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு எளிமையான விசா செயல்முறைகள்
தனியார் துறையில் ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் உயர்ந்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார். “குறிப்பாக, 2022ல் தனியார் துறையில் பெண்களின் பங்களிப்பு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பெண்களுக்கு ஐக்கிய அரபு அமீரக தலைமையின் ஆதரவிற்கும், பணியிடத்தில் அதிக சேர்க்கை மற்றும் பன்முகத்தன்மையை அடைவதற்கான தொழிலாளர் சந்தை சட்டம் மற்றும் தேசிய கொள்கைகளின் திறமைக்கும் சான்றாகும். ” என்றார் டாக்டர் அல் அவார்.
நாட்டின் கட்டாய எமிரேடிசேஷன் திட்டம் நடைமுறைக்கு வந்ததால், தனியார் துறையில் அமீரக வாசிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அமீரக பொருளாதாரத்தின் வலிமை மற்றும் தனியார் துறையில் வேலை வாய்ப்புகளின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது.
"அமீரகத்தை மேம்படுத்தும் மற்றும் சர்வதேச திறமைகளை ஈர்க்கும் ஒரு போட்டி தொழிலாளர் சந்தையை உருவாக்க எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குகிறோம்" என்று டாக்டர் அல் அவார் கூறினார். 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10 சதவீதத்தை எட்டும் வகையில் எமிரேடிசேஷன் விகிதங்களை ஆண்டுதோறும் 2 சதவிகிதம் உயர்த்துவதை ஒரு கூட்டாட்சி சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் திறமையான பாத்திரங்களில் (ஸ்கில்ட் ரோல்ஸ்) 2 சதவிகித எமிரேட்டிகளை நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டும். இந்த ஆண்டு (2023) ஜூலை 1 ஆம் தேதிக்குள் 1 சதவீதத்தையும், ஆண்டு இறுதிக்குள் மேலும் 1 சதவீதத்தையும் சேர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | 'One Touch' கோல்டன் விசா சேவையை அறிமுகம் செய்தது ஐக்கிய அரபு அமீரகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ