ஆஸ்திரேலியாவில் வசிக்கும் என்ஆர்ஐ தம்பதியின் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ஆர்ஐ தம்பதியான ஷில்பா ஷர்மா மற்றும் அருண் ஷர்மா பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா போலிஸ் கமிஷனரை சந்தித்து, தாங்கள் டிஎஸ்பி ரந்தீர் சிங்குக்கு எதிராக அளித்த நில அபகரிப்பு புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, இதில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துக்ரியில் அமைந்துள்ள தங்களின் ப்ளாட்டின் ஒரு பகுதியை போலீஸ் அதிகாரி சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த நிலத்தில் சில அறைகளை கட்டி, அதை சிலருக்கு வாடகைக்கு விட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.


இது தொடர்பாக டிஜிபி மற்றும் முதல்வர் அலுவலகத்துக்கு சமீபத்தில் புகார் அளித்துள்ளதாகவும், அங்கிருந்து லூதியானா காவல்துறையிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் ஷில்பா கூறினார்.


"காவல்துறையும் விசாரணை நடத்தியது, ஆனால் எந்த காவல்துறை அதிகாரியும் நிலத்தின் உரிமையை சரிபார்க்க சம்பவ இடத்திற்குச் செல்லவில்லை. அந்த அதிகாரி மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று, நாங்கள் சிபி கவுஸ்துப் சர்மாவைச் சந்தித்தோம், அவர் சில மூத்த அதிகாரிகளிடம் இருந்து விஷயத்தை மீண்டும் சரிபார்த்து, சட்டப்படி இந்த வழக்கில் நீதி வழங்கப்படும் என்று உறுதியளித்தார், ”என்று அவர் கூறினார்.


மேலும் படிக்க | அயோதிக்கு வந்த NRI பெண்ணிடம் திருட்டு: பாஸ்போர்ட், பணம் மாயம் 


இதுவரை 1,400 சதுர கெஜம் நிலத்தில் சுமார் 90 சதுர கெஜத்தை அந்த போலீஸ்காரர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நிலத்தின் மற்ற பகுதியையும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து விடுவார் என்று தாங்கள் அஞ்சுவதாகவும் ஷில்பா கூறினார்.


"நாங்கள் எங்கள் நிலத்திற்குச் செல்வதில்லை, ஏனெனில் அவர் எங்களை ஏதேனும் போலி கிரிமினல் வழக்கில் சிக்க வைக்கலாம்" என்று என்ஆர்ஐ ஆன ஷிப்லா தெரிவித்தார். என்ஆர்ஐ தம்பதியினருடன் அருணின் தந்தையும் வந்திருந்தார். அவரும் ரியல் எஸ்டேட் பிசினசில் உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. டிஎஸ்பி மீது குற்றச்சாட்டுகள் இருப்பதால் போலீசார் இந்த வழக்கில் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. 


"இந்த வழக்கில் போலீசார் முறையான விசாரணை நடத்தத் தவறினால், நீதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்" என்று தம்பதியினர் தெரிவித்தனர்.


இதற்கிடையில், டிஎஸ்பி ரந்தீர் சிங் ஊடகங்களில், “வெவ்வேறு அதிகாரிகளால் ஏற்கனவே நான்கு விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் எனது தலையீட்டை யாரும் கண்டுபிடிக்கவில்லை. சொத்து வியாபாரியான மஞ்சித் சிங்குடன் தம்பதியினருக்கு பிரச்சினை உள்ளது. மேலும் இருவரும் தேவையில்லாமல் என்னை வழக்கில் இழுத்து என் இமேஜைக் கெடுக்க முயற்சிக்கின்றனர். இந்த வழக்கில் நான் முற்றிலும் சுத்தமானவன் என்பது தெரியவரும்” என்று கூறியுள்ளார்.


என்ஆர்ஐ தம்பதி கூறுவது சரியா அல்லது காவல் துறை அதிகாரி கூறுவது சரியா என்பது அடுத்த கட்ட விசாரணைகள் மூலம் கண்டறியப்படும். 


மேலும் படிக்க | தோஹாவில் 8 இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் கைது! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ