22 வயதில் துபாய் பயணம்! 24 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த NRI

24 வருடங்களாக தாயகம் திரும்ப முடியாமல் துபாயில் தவித்து வந்தவருக்கு உதவி செய்து இந்தியாவுக்கு வரவழைத்த அமீரக காயிதே மில்லத் பேரவை 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 25, 2022, 11:24 AM IST
  • தாயகம் திரும்ப முடியாமல் 24 வருடங்களாக துபாயில் தவித்த இந்தியர்!
  • விசா தொலைந்ததால் துபாயில் சிக்கிய குமார்
  • 22 வயதில் துபாய் பயணம்! 24 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த NRI
22 வயதில் துபாய் பயணம்! 24 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த NRI title=

சென்னை: சிவகங்கை மாவட்டம், வெளங்கப்பட்டி கிராமத்த சேர்ந்த ஆ. குமார், 1998 ஆம் ஆண்டு தனது 22வது வயதில் துபாய்க்கு கூலி வேலைக்கு வந்தார். வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்தில் தனது கடவுச்சீட்டைத் தொலைத்துவிட்டு, எந்த உதவி கிடைக்காமல் திரும்பி தாயகம் செல்ல முடியாமல் 24  ஆண்டுகளாக துபாயில் தவித்து வந்தார். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் வயிறு பகுதியில் அடிபட்டு குடல் முற்றிலுமாக சேதமடையந்தது. அவரின் பெற்றோர்கள் அமீரக காயிதே மில்லத் பேரவை (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-IUML ) நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அவரை நாடு திரும்ப அனுப்ப உதவி செய்ய கோரிக்கை வைத்தனர்.

அமீரக காயிதே மில்லத் பேரவை துணை பொதுசெயலாளர் M.S.A பரக்கத் அலி, ஊடகத்துறை செயலாளர் M.K ரிபாய் மற்றும் காரமா பகுதி செயலாளர் தர்வேஷ் ஆகியோர் குமாரை நேரில் சந்தித்து, அவரை இந்திய துணைத் தூதரகத்திற்கு அழைத்து சென்று உதவி செய்ய கோரினார்கள்.

குமார், அமீரகம் வந்து 24 வருடம் ஆனதாலும், அவரிடமோ அவர் பெற்றோர்களிடமோ இவரின் கடவுச்சிட்டு நகல் மற்றும் அவர் இந்தியர் என்பதற்கான வேறு எந்த ஆதாரம் இல்லாததால், தமிழக அரசிடமிருந்து இவர் இந்தியர் என்பதை உறுதிசெய்தால் மட்டுமே இவரை தாயகம் அனுப்ப முடியும் என இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

மேலும் படிக்க | திரைப்பட இயக்குநராக அவதாரம் எடுக்கும் தமிழ்ப்பேச்சு ராஜ்மோகன் 

உடனடியாக இந்த தகவலை, தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு அவர்களின் கவனத்திற்கு அமீரக காயிதே மில்லத் ஊடகத்துறை செயலாளர் M.K. ரிபாய் கொண்டு சென்றார். தகவல் தெரிவித்த 8மணி நேரத்தில் விசாரித்து, குமார் இந்தியன் என்பதற்கான கோப்புகளை, மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம் மூலமாக காயிதே மில்லத் பேரவை ஊடகதுறை செயலாளருக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கோப்புகளை துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் அளித்து அவருக்கு உடனடியாக எமெர்ஜென்சி கடவுச்சிட்டு கிடைக்க பெற்று, immigiration clear செய்ய அனைத்து உதவிகளையும் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் செய்தனர்.

22 வயதில் துபாய்க்கு வந்து, தற்போது 46 வயதில் தாயகம் திரும்பிய குமார், 24 ஆண்டுகளுக்கு பிறகு  தனது குடும்பத்துடன் இணைந்து விட்டார். உரிய நேரத்தில் உதவி செய்த பேரவை நிர்வாகிகளுக்கு குமாரின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

இதை போல் 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் துபாயில் சிக்கி தவித்து வந்தவர்களை தனி விமானம் மூலம் தமிழகம் அழைத்து செல்லவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சுக்கிரனின் மாளவ்ய யோகத்தால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடும் ராசிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News