ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! விசா தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள ஒரு புதிய விழிப்புணர்வு முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. விசா செயல்முறை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் இதில் பதில் கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியுரிமை மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (ஜிடிஆர்எஃப்ஏ) டெய்ரா சிட்டி சென்டரில் 'அனைவருக்கும் ஒரு தாயகம்' என்ற தலைப்பில் 3 நாள் பிரச்சாரத்தை நடத்தி, விசாவில் சிக்கல் உள்ள குடியிருப்பாளர்கள், நாட்டிற்கு பல வித பணிகளுக்காக வந்தவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அணுகி அவர்களது சிக்கல்களை தீர்த்து வருகிறது. 


பிப்ரவரி 25 முதல் 27 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த பிரச்சாரம், டெய்ரா சிட்டி சென்டரில் உள்ள ஒரு ஸ்டாலில் நடைபெறுகிறது. இதில் ஜிடியாரெஃப்ஏ அதிகாரிகள் வழிகாட்டுதல்களை வழங்குவார்கள். விசாவில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த அதிகாரிகளை தொடர்புகொண்டு பிரச்சனைக்கு தீர்வு காணலாம். பர்மிட் அளவை மீறி நாட்டில் தங்கியவர்கள் மற்றும் காலாவதியான ஆவணங்கள் உள்ளவர்கள் உட்பட அனைவருக்கும் தீர்வு கிடைக்கும். சென்டர்பாயின்ட் அருகே அமைந்துள்ள இந்த ஸ்டால் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.


மேலும் படிக்க | NRI மாணவர்களுக்கு சூப்பர் செய்தி: நீங்களும் CUET UG 2023-க்கு விண்ணப்பிக்கலாம்


தங்களுடைய விசாக்களின் செல்லுபடியாகும் தன்மையைப் பற்றி உறுதியாகத் தெரியாத குடியிருப்பாளர்கள், தங்கள் பாஸ்போர்ட்டுகளை மட்டும் பயன்படுத்தி தங்கள் அனுமதியின் காலாவதியை சரிபார்க்கலாம்.


GDRFA சமூக ஊடக இடுகையின் படி, இந்த கேம்பைன் நுழைவு மற்றும் குடியிருப்பு சட்டங்களுக்கு இணங்குவதற்கான கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகின்றது. GDRFA இன் வாடிக்கையாளர் மகிழ்ச்சித் துறையின் இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் சேலம் பின் அலி, மக்களை அச்சமின்றி இந்த ஸ்டாலுக்கு வந்து பிரச்சனைகளை விளக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். "நீங்கள் 10 வருடங்கள் அதிகமாக தங்கியிருந்தாலும், எங்கள் ஊழியர்கள் உங்களுக்காக ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பார்கள்," என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார். 


ஐக்கிய அரபு அமீரகத்தில், அனுமதிக்கப்பட்ட விசா காலத்தை விட அதிகமாக தங்குவதற்கு, ஒரு நாளைக்கு 50 டிஹம்ஸ் அபராதமாக விதிக்கப்படுகிறது. இது விசா ரத்துகளுக்கும் பொருந்தும். மேலும் இதற்கு பெரும் அபராதங்களும் விதிக்கப்படலாம். இந்த பிரச்சாரம் UAE யில் உள்ளவர்களுக்கு விசா தொடர்பான ஏதேனும் சிக்கல்களை சரிசெய்ய வாய்ப்பளிக்கும் என ஜிடிஆர்எஃப்ஏ தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் களம் இறங்கும் விவேக் ராமசாமி! யார் இவர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ