அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் களம் இறங்கும் விவேக் ராமசாமி! யார் இவர்!

US Presidential Election: கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ள நிலையில், வரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளதால், இப்போதே அதிபர் தேர்தல் பரபரப்பு தொடங்கி விட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 23, 2023, 02:58 PM IST
  • 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி தொழிலதிபர்.
  • அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
  • ராமசாமி ஓஹியோவின் சின்சினாட்டியில் பிறந்து வளர்ந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் களம் இறங்கும் விவேக் ராமசாமி! யார் இவர்! title=

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ள நிலையில், வரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளதால், இப்போதே அதிபர் தேர்தல் பரபரப்பு தொடங்கி விட்டது. அதிபர் தேர்தலுக்கு அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியை சேர்ந்த தொழிலதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான விவேக் ராமசாமி, அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப தொழிலதிபர் விவேக் ராமசுவாமி, 2024ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக பிப்ரவரி 22ம் தேதி அறிவித்தார். முன்னதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தெற்கு காரோலினா ஆளுநராக இருந்தவருமான நிக்கி ஹேலி அதிபர் தேர்தலில் போட்டியிடம் கடந்த வாரம் விருப்பம் தெரிவித்தார். டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் ஐநாவுக்கான அமெரிக்க தூதராகவும் செயல்பட்டிருக்கிறார் நிக்கி ஹேலி. அரசியல் அனுபவம் நிறைந்திருப்பதால் நிக்கி ஹேலிக்கு குடியரசுக் கட்சியில் கணிசமான ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அதிபர் பதவிக்காக தான் போட்டிடுவது குறித்த அறிவித்த விவேக் ராமசாமி, "இந்த நாட்டில் இலட்சிய நோக்கங்களை நிறைவேற்ற நான் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்று இன்றிரவு சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்," என்று கூறினார், "நமது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், 'அமெரிக்காவிற்கு' மீண்டும் 'பெருமை' சேர்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன. என்றார் விவேக் ராமசாமி. 37 வயதான அவர் "Woke, Inc.: Inside Corporate America's Social Justice Scam" என்ற நூலின் ஆசிரியர் மற்றும் "Anti-Woke, Inc நிறுவனத்தின் CEO" என்று அழைக்கப்பட்டார்.

மேலும் படிக்க | துருக்கி, சிரியா நிலநடுக்க நிவாரணத்திற்காக ரூ.11 கோடி நன்கொடை அளித்த என்ஆர்ஐ தொழிலதிபர்

யார் அந்த விவேக் ராமசாமி

ராமசாமி ஓஹியோவின் சின்சினாட்டியில் பிறந்து வளர்ந்தார். இவருடைய பெற்றோர் இந்தியாவின் கேரளாவின் பாலக்காடு வடக்கஞ்சேரியில் இருந்து குடியேறியவர்கள். கேரளாவில் உள்ள உள்ளூர் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு, அவரது தந்தை வி.ஜி. ராமசாமி, ஓஹியோவின் ஈவென்டேலில் உள்ள ஜெனரல் எலக்ட்ரிக் ஆலையில் பணிபுரிந்தார். சின்சினாட்டியின் செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் ராமசாமி 2003ம் ஆண்டில் டிப்ளோமா பெற்றார். கல்லூரியில் சிறந்த மாணவராகவும், வகுப்பில் முதல் மாணவராகவும் விளங்கிய அவர் , தேசிய அளவில் ஜூனியர் டென்னிஸ் வீரராகவும், உயர்நிலைப் பள்ளியில் திறமையான பியானோ கலைஞராகவும் இருந்தார்.

37 வயதான இரண்டாம் தலைமுறை இந்திய அமெரிக்கரான விவேக் ராமசாமி, 2014 ஆன் ஆண்டு ரோவியண்ட் சயின்ஸஸ் (Roivant Sciences) என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்ப்படுத்தினார். பல நோய் வகைகளில் வெற்றிகரமான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு பல மருந்துகளை FDA-அங்கீகரித்தது. அமெரிக்காவின் சிறந்த தொழில்முனைவோராக பிரபலமடைந்த இவர் மருத்துவ துறையில் தனது சிறந்த பணிக்காக விரைவாக பிரபலமடைந்தார், மேலும் 2015ம் ஆண்டில் ஃபோப்ஸ் பத்திரிகையின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார்.

2021 ரோவியண்ட் சயின்ஸஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியில் இருந்து விலகிய பிறகு, பில்லியனர் தொழிலதிபர் பீட்டர் தியல் மற்றும் அவரது சட்ட கல்லூரி நண்பர் JD வான்ஸ் ஆகியோரால் நிதி ரீதியாக ஆதரிக்கப்படும் Ohio-ஐ தளமாகக் கொண்ட சொத்து மேலாண்மை நிறுவனமான Strive Asset Management நிறுவனத்தை ராமசாமி இணைந்து நிறுவினார். 

விவேக் ராமசாமியின் அரசியல் சித்தாந்தம்

விவேக் 'Woke' கலாச்சாரத்தின் விமர்சகர், அவர் "Woke" கலாச்சாரத்தை ஒரு தேசிய அச்சுறுத்தல் பிரச்சினையாக கருதுகிறார். அவர் தனது பிரச்சாரத்தை அறிவித்தபோது "அமெரிக்க வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும்" உறுதியான நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்தார். பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தை விமர்சிப்பதில் விவேக் பெரிதும் அறியப்பட்டவர்.

அமெரிக்க தேசியவாதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட விவேக் ராமசாமிக்கும் குடியரசுக் கட்சியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. விவேக் ராமசாமி அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சிக்குள்ளேயே டிரம்ப், விவேக் ராமசாமி, நிக்கி ஹேலி உட்பட 10-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதை அடுத்து, அவர்களுக்குள் தேர்தல் நடைபெற்று அதில் வெற்றி பெறுபவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | UPI- PayNow: வெளிநாடு வாழ் இந்தியர்கள் எளிதாக குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்பலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News