அமீரகம் வாழ் தமிழர்களுக்கு முக்கிய செய்தி: பல்கலைக்கழக சேர்க்கை விதிகளில் மாற்றம்
NRI News: புதிய முடிவு 2023-2024 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் கல்வியின் தரம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இது குழந்தைகளின் படிப்பு, குறிப்பாக உயர்கல்வி குறித்த முக்கிய தகவலாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இனி பல்கலைக்கழக சேர்க்கைக்கு எமிரேட்ஸ் தரநிலைப்படுத்தப்பட்ட தேர்வுகளை (எம்சாட்) விண்ணப்பிக்க தேவையில்லை என்று சென்ற வாரம் அறிவிக்கப்பட்டது. இது குறித்த பல விதிமுறைகளும் வெளியிடப்பட்டன.
எம்சாட் (EmSAT ) முடிவுகள் இப்போது பல்கலைக்கழக அனுமதிக்கான விருப்ப அளவுகோலாக மட்டுமே இருக்கும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய கொள்கையின்படி, மாணவர்களின் திறமையை மதிப்பிடுவதற்கு நிறுவனங்கள் பிற சோதனைகளைப் பயன்படுத்தலாம். குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயிக்கும் நெகிழ்வுத்தன்மையும் அவர்களுக்கு உண்டு.
இந்த புதிய முடிவு 2023-2024 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் கல்வியின் தரம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவு மாணவர்களின் ஆர்வங்கள், திறன்கள் மற்றும் திறமைகளுக்கு ஏற்ப ஒரு பல்கலைக்கழக மேஜரை தேர்ந்தெடுக்கும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | இந்திய பட்ஜெட் 2023 வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சாதகமா? இல்லை பாதகமா?
EmSAT என்பது நாட்டிற்குள்ளும் வெளியிலும் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளின் பட்டதாரிகளை மதிப்பிடும் கணினி அடிப்படையிலான சோதனைகளின் தேசிய அமைப்பாகும். இந்த அறிவிப்புக்கு முன், ஐக்கிய அரபு அமீரக பல்கலைக்கழகங்களில் சேர தேர்வு முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி அமைச்சர் டாக்டர் அஹ்மத் பெல்ஹவுல் அல் ஃபலாசி, சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப, நாட்டில் கல்வி முறையை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உயர்கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு விரிவான ஆய்வின் அடிப்படையில் புதிய கொள்கை உருவாக்கப்பட்டது என்று அவர் விளக்கினார்.
மாணவர்களின் கல்விக்கான சிறந்த முடிவுகளை உறுதி செய்வதற்காக நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து முடிவின் முன்னேற்றங்களை அமைச்சகம் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
புதிய விதியின் மூலம், கல்வி நிறுவனங்கள் சேர்க்கை அளவுகோல்களை சரிசெய்ய முடியும். மேலும், இதன் மூலம் கல்வி நிறுவனங்கள் தங்கள் மேஜர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்க முடியும். இது சந்தையில் உள்ள தொழிலாளர் தேவைகளுடன் இளைஞர்களின் திறன்களை சீரமைக்க உதவும் என்று அல் ஃபலாசி கூறினார்.
மேலும் படிக்க | NRI மைனர் பெயரில் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வது எப்படி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ