ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய NRI-கள் தேர்ந்தெடுக்கும் டாப் நகரங்கள்
குறிப்பிடத்தக்க வகையில், அதிகமான என்ஆர்ஐ-கள் பங்குச்சந்தை, மியூசுவல் ஃபண்டுகள், தங்கம் மற்றும் நிலையான வைப்புகளை விட இந்திய ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் தொடர்ந்து இருக்கும் ஏற்றம் ஆகியவை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்த துறையில் முதலீடு செய்வதற்கு குறிப்பிடத்தக்க காரணிகளாக உள்ளன. சமீபத்திய CII-ANAROCK நுகர்வோர் உணர்வு கருத்துக்கணிப்பு, ஹைதராபாத், என்சிஆர் மற்றும் பெங்களூரு ஆகியவை என்ஆர்ஐகளின் வீட்டு முதலீட்டிற்கான சிறந்த தேர்வுகளாக உள்ளதாக காட்டுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆய்வில் கலந்துகொண்ட என்ஆர்ஐ-களில் குறைந்தது 60% பேர் இந்த மூன்று நகரங்களில் ஒன்றில் வீடுகளை வாங்குவதாக தெரிவித்தனர். 22% பேர் ஹைதராபாத்தில் கவனம் செலுத்துகிறார்கள். 20% பேர் NCR-ல் கவனம் செலுத்துகிறார்கள். 18% பேர் பெங்களூருவில் சொத்து வாங்க ஆசைப்படுவதாக தெரிகிறது. கடந்த ஆண்டு இதே காலக் கணக்கெடுப்பில், பெங்களூரு, புனே மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் பெரும்பாலான என்ஆர்ஐக்களுக்கு சிறந்த தேர்வாக இருந்தன.
கணக்கெடுப்பில் பங்கேற்ற 5,500 பேரில், 7% என்ஆர்ஐ-கள் தற்போது அமெரிக்கா, கனடா, வளைகுடா, ஐரோப்பா மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளில் உள்ளனர்.
குறிப்பிடத்தக்க வகையில், அதிகமான என்ஆர்ஐக்கள் பங்குச்சந்தை, மியூசுவல் ஃபண்டுகள், தங்கம் மற்றும் நிலையான வைப்புகளை விட இந்திய ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். கணக்கெடுப்பின் தற்போதைய பதிப்பில், 71% என்ஆர்ஐ-கள் இந்திய ரியல் எஸ்டேட் துறையை முதலீடாக கருதுகிறார்கள். இது கோவிட்-க்கு முந்தைய பதிப்பில் இருந்த 55% அதிகமாகும்.
மேலும் படிக்க | கனடாவின் மலிவுத் தொழிலாளர்களாக நாங்கள்? இந்திய மாணவர்கள் குற்றச்சாட்டு
2021 இன் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2022 இன் முதல் ஒன்பது மாதங்களில் வீட்டுவசதிக்கான என்ஆர்ஐ தேவை 15-20% அதிகரித்துள்ளது. கோவிட் தோற்றுக்கு பிந்தைய காலத்தில் பெரிய வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும், கூடுதல் இடத்திற்கான ஆசை குறையாமல் உள்ளது. பல பெரிய ஐடி நிறுவனங்கள் மற்றும் ஐடி ட்ரிவன் ஸ்டார்ட்-அப்கள் இப்போது ஹைப்ரிட் வொர்க் மாடலில் இயங்குகின்றன.
என்ஆர்ஐ-களுக்கு, சாதகமான மாற்று விகிதம் பெரிய வீடுகளைப் பாதுகாப்பதற்கான மற்றொரு முக்கிய உந்துதலாக உள்ளது. தற்போதைய H1 2022 கணக்கெடுப்பின்படி, 77% என்ஆர்ஐ-கள் பெரிய வீடுகளை வாங்க விருப்பம் கொண்டுள்ளார்கள், 54% பேர் 3BHKகளுக்கு ஆதரவாகவும், 23% பேர் 4BHK-களை வாங்கவும் விரும்புகின்றனர். வெறும் 22% என்ஆர்ஐ-கள் இப்போது 2BHK களைத் தேடுகின்றனர். கோவிட்-க்கு முந்தைய கணக்கெடுப்பில், குறைந்தது 40% பேர் 2BHK-ஐ தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்கு இணைக்கப்பட்ட அமைப்பு மற்றும் சமீபத்திய மற்றும் தொடர்ந்து வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த நகரங்களை முதலீடுகளுக்காக தேர்ந்தெடுக்க பெரும் காரணங்களாக அமைகின்றன. நவீன கால வீடுகள் ஆடம்பரமான டவுன்ஷிப்களில் பிரபல மற்றும் முக்கிய இடங்களில் அமைந்துள்ளன. விடுமுறை இல்லங்கள் அல்லது குறுகிய காலப் பயணங்களுக்காக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மலைப்பாங்கான பகுதிகளில் அழகான அமைப்புகள் மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் புவி-இயற்பியல் இருப்பிடங்களில் முதலீடு செய்கின்றனர்.
மேலும் படிக்க | அமீரக மக்களுக்கு முக்கிய செய்தி: இன்று முதல் பெட்ரோல் விலையில் மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ