இந்திய ரியல் எஸ்டேட் துறையில் அதிகரிக்கும் NRI முதலீடுகள்

NRI Investments: இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகள் வலுவாக உள்ளன என்றும், வரும் ஆண்டுகளில் இவை மேலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் பல்வேறு துறை ஆய்வுகள் காட்டுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 26, 2022, 03:31 PM IST
  • அதிகரிக்கும் வெளிநாட்டு முதலீடுகள்.
  • ரியல் எஸ்டேட் துறையில் ஆர்வம் காட்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்.
  • நன்கு இணைக்கப்பட்ட அமைப்பு மற்றும் வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த நகரங்களை முதலீடுகளுக்காக தேர்ந்தெடுக்க பெரும் காரணங்களாக அமைகின்றன.
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் அதிகரிக்கும் NRI முதலீடுகள் title=

இந்த ஆண்டு இந்திய சந்தையில் பெரும்பாலான துறைகளில் அதிவேக வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு உள்ளது. இதில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்யும் முதலீடுகளின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகள் வலுவாக உள்ளன என்றும், வரும் ஆண்டுகளில் இவை மேலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் பல்வேறு துறை ஆய்வுகள் காட்டுகின்றன. ரியல் எஸ்டேட்டில் என்ஆர்ஐ முதலீடுகள் கடந்த ஆண்டு பில்லியன் டாலர்களுக்கு சமமாக இருந்தது. இது இந்திய ரியல் எஸ்டேட் மந்தநிலையைக் காணும் தொற்றுநோய் காலங்களில் ஒரு ஊக்கமாக வந்தது.

ரியல் எஸ்டேட் முதலீடுகளை பொறுத்தவரை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெரும்பாலும் இந்தியாவில் சொகுசு வீடுகள் மற்றும் விடுமுறை சொத்துக்களில் ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலான முன்பதிவுகள் அந்த வகைகளில் காணப்படுகின்றன. இது ரியல் எஸ்டேட் வணிகத்திற்கான ஒரு நேர்மறையான அறிகுறியாகும். ஏனெனில் இது மற்ற முதலீட்டை விட அதிக மற்றும் சிறந்த வருமானத்தை உறுதியளிக்கும் ஒரு கவர்ச்சிகரமான சொத்தாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது.

என்ஆர்ஐ முதலீடுகளுக்கு டெல்லி, சென்னை, பூனே, பெங்களூரு ஆகிய நகரங்களும், மேலும் சில வளர்ந்து வரும் நகரங்களும் ஏற்ற மையங்களாக பார்க்கப்படுகின்றன. இந்தியாவில் ஆடம்பர வீடுகளில் முதலீடு செய்வதில் ஆர்வமுள்ள என்ஆர்ஐகள் மற்றும் வெளிநாட்டினரின் கவனத்தை இந்த நகரங்கள் ஈர்த்துள்ளன. 

மேலும் படிக்க | ஷார்ஜா வாழ் தமிழர்களுக்கு முக்கிய செய்தி: ஜனவரி 1, 2024 முதல் இதற்கு தடை 

நன்கு இணைக்கப்பட்ட அமைப்பு மற்றும் சமீபத்திய மற்றும் தொடர்ந்து வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த நகரங்களை முதலீடுகளுக்காக தேர்ந்தெடுக்க பெரும் காரணங்களாக அமைகின்றன. நவீன கால வீடுகள் ஆடம்பரமான டவுன்ஷிப்களில் பிரபல மற்றும் முக்கிய இடங்களில் அமைந்துள்ளன. இவை பிரபலமான மையங்கள், கலாச்சார மையங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் விரும்பத்தக்க வாழ்க்கை முறை மற்றும் வசதியை வழங்கும் பணியிடங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. சர்வதேச பள்ளிகள், மருத்துவமனைகள், நிதி நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை இடங்களுக்கு அருகாமையில் இந்த இடங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. 

கோவிட் சமயத்தில் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் சொந்த ஊர்களில் இருந்து அந்நியப்படுதல் போன்ற உணர்வும் வெளிநாடு வாழ் இந்தியர்களை மீண்டும் இந்திய சந்தைகளுக்கு அழைத்து வந்துள்ளது. தாய்நாட்டுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துதல் மற்றும் இதேபோன்ற வாழ்க்கை முறையை அனுபவிக்கும் விருப்பம் மற்றும் ஒத்த சமூக மற்றும் கலாச்சார அமைப்பு மற்றும் அடையாளத்தை உடையவர்களுடன் பரிமாற்றம் ஆகியவை ரியல் எஸ்டேட் துறையில் என்ஆர்ஐ- களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது தவிர, பொருளாதார காரணிகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. 

விடுமுறை இல்லங்கள் அல்லது குறுகிய காலப் பயணங்களுக்காக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மலைப்பாங்கான பகுதிகளில் அழகான அமைப்புகள் மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் புவி-இயற்பியல் இருப்பிடங்களில் முதலீடு செய்கின்றனர். கோவா, சென்னை, மணாலி, ஜிராக்பூர் போன்றவை, விடுமுறை இல்லங்களுக்கு மிகவும் கவனிக்கப்பட்ட இடங்களாகும். அதிகமான வருமானம் மற்றும் சுய பயன்பாடு ஆகியவை இவற்றை வாங்குவதற்கு பின்னால் உள்ள முக்கிய காரணங்களாக உள்ளன. 

நோக்கம் எதுவாக இருந்தாலும், ரியல் எஸ்டேட் சந்தையில் என்ஆர்ஐ-களின் அதிக முதலீடு உள்ளது. இது டெவலப்பர்களுக்கான நுகர்வோர் சந்தைத் தளத்தை விரிவுபடுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சூப்பர் செய்தி: 7 நாடுகளில் ஐஐடி தொடங்க திட்டம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News