வாஷிங்டன்: வர்த்தகக் கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைக் குழுவில் ஃப்ளெக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ரேவதி அத்வைதி மற்றும் இயற்கை வள பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி மணீஷ் பாப்னா ஆகிய இரு இந்திய-அமெரிக்கர்களை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ளார். அமெரிக்க வர்த்தகக் கொள்கையின் வளர்ச்சி, செயல்படுத்தல் மற்றும் நிர்வாகம் ஆகிய விஷயங்களில் அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதிக்கு ஒட்டுமொத்த கொள்கை ஆலோசனைகளை வழங்கும் ஆலோசனைக் குழுவிற்கு 14 பேரை நியமிக்க இருப்பதாக முன்னதாக, பிடன் அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கு முன், அதன் நோக்கங்கள் மற்றும் பேரம் பேசும் நிலைகள், வர்த்தக உடன்படிக்கைகளை செயல்படுத்துவதன் தாக்கம், வர்த்தக ஒப்பந்தத்தின் செயல்பாட்டைப் பற்றிய விஷயங்கள் மற்றும் வளர்ச்சி, செயல்படுத்தல் மற்றும் நிர்வாகம் தொடர்பாக எழும் பிற விஷயங்கள் ஆகியவை இதில் அடங்கும். 


ரேவதி அத்வைதி ஃப்ளெக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். 2019 ஆம் ஆண்டில்  இந்த பதவியை ஏற்றுக்கொண்டதில் இருந்து, அத்வைதி நிறுவனத்தின் மூலோபாய உத்திகளை ஏற்படுத்துவதற்கும், உற்பத்தியில் ஒரு புதிய சகாப்தத்தை வரையறுக்கும் மாற்றத்தின் மூலம் ஃப்ளெக்ஸை வழிநடத்துவதற்கும் பொறுப்பானவர் என்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஃப்ளெக்ஸுக்கு முன், அத்வைதி 20 பில்லியனுக்கும் அதிகமான விற்பனை மற்றும் 102,000 ஊழியர்களைக் கொண்ட ஈட்டனின் மின்சாரத் துறை வணிகத்திற்கான தலைவராகவும் தலைமை இயக்க அதிகாரியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஈட்டனின் மின் துறை, அமெரிக்காஸ் மற்றும் ஹனிவெல் ஆகியவற்றிலும் பணிபுரிந்துள்ளார். மேலும் Uber மற்றும் Catalyst.org இன் இயக்குநர்கள் குழுவில் பணியாற்றுகிறார்.


மேலும் படிக்க | NRI Judge In USA: நியூயார்க்கில் மாவட்ட நீதிபதியாகிறார் தமிழர் அருண் சுப்பிரமணியன்


அத்வைதி உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) மேம்பட்ட உற்பத்தித் தலைமை நிர்வாக அதிகாரி சமூகத்தின் இணைத் தலைவராக உள்ளார் மற்றும் CEO காலநிலை தலைவர்களின் WEF கூட்டணியில் சேர்ந்தார்.அவர் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பார்ச்சூனின் வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டார் மற்றும் இந்தியாவின் பிசினஸ் டுடேயின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக பெயரிடப்பட்டார். பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டமும், தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.


மனிஷ் பாப்னா இயற்கை வளங்கள் பாதுகாப்பு கவுன்சிலின் (NRDC) தலைவர் மற்றும் CEO ஆவார், இது கடந்த அரை நூற்றாண்டின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் மைல்கற்களை கடக்க முக்கியப் பங்கு வகித்துள்ளார். மேலும்,  சுற்றுச்சூழல் சட்டங்களை உருவாக்குவது, முக்கிய சட்ட வெற்றிகள் மற்றும் அடித்தள ஆராய்ச்சி வரை, அவர் ஆற்றிய பங்கு அளப்பறியது என வெள்ளை மாளிகை கூறியது. அவரது 25 ஆண்டுகால தொழில் வாழ்க்கையில், பாப்னாவின் தலைமைப் பொறுப்புகள் மூலம்,  வறுமை மற்றும் காலநிலை மாற்றத்தின் மூல காரணங்களை சமமான, நீடித்த மற்றும் அளவிடக்கூடிய உத்திகளைக் கையாள்வதில் கவனம் செலுத்தினார். 


மனிஷ் பாப்னா மிக சமீபத்தில், அவர் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் மற்றும் மனித வள மேம்பாட்டின் பலவித துறைகளில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி அமைப்பான உலக வள நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார். பயிற்சியின் மூலம் பொருளாதார நிபுணரான அவர், வங்கி தகவல் மையத்தில் வக்கீல் தொழிலைத் தொடரும் முன், மெக்கின்சி & கம்பெனி மற்றும் உலக வங்கியில் தனது தொடக்கத்தைப் பெற்றார். அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முதுகலைப் பட்டங்களையும், எம்ஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | அமெரிக்க விமான விபத்தில் இந்திய வம்சாவளி பெண் பலி! மகள் மற்றும் விமானி படுகாயம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ