மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE),  2022ம் ஆண்டின், 10, 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள்  ஜூலையில் வெளியிடப்படும் என கூற நிலையில், இன்று (ஜூலை 15, 2022) தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பருவம் 1-க்கான முடிவுகளை CBSE வாரியம் அறிவித்துள்ளது. இரண்டாம் பருவ முடிவுகள் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் வெளியிடப்படும்.இந்நிலையில், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவது தாமதமாவதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மாணவர்கள்  கவலையில் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தாமதமாக வருவதால், பல பல்கலைக்கழகங்கள் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கையைத் தொடங்கியுள்ளன. இருப்பினும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) சமீபத்திய ஆலோசனையானது,  சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவித்த பிறகு இளங்கலை சேர்க்கைக்கான கடைசி தேதியை நிர்ணயிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


சிபிஎஸ்இ வாரிய தேர்வு மதிப்பெண்கள் தேவை என இந்தியப் பல்கலைக்கழகங்கள் கேட்கின்றனர் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் கூறுகின்றனர். ஷார்ஜா இந்தியன் பள்ளிமாணவர் லாமீஸ் முகமது இது குறித்து கூறுகையில், “கேரளாவில் BCom (Bachelor of Commerce) படிப்பை தொடர திட்டமிட்டுள்ளேன். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் சரியான நேரத்தில் வெளிவராததால் எங்கள் கல்லூரி சேர்க்கை பாதிக்கப்படும் என எங்களுக்கு கவலையாக உள்ளது. கேரளாவில், பெரும்பாலான கல்லூரிகள் மாணவர்களின் போர்டு மதிப்பெண்களைப் பொறுத்து ஒதுக்கீடுகளை வழங்குவதே இதற்குக் காரணம். மாநில வாரியங்கள் ஏற்கனவே முடிவுகளை வெளியிட்டுவிட்டதால், மாணவர்களில் பலர் ஏற்கனவே சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். தேர்வு முடிவுகள் தாமதமாகிவிட்டால், இந்தக் கல்லூரிகளில் சீட் கிடைப்பது கடினம்.


மேலும் படிக்க: UIDAI JOBS: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வேலைவாய்ப்பு: முழு விவரம்


இருப்பினும், எங்கள் மாணவர்கள்  மன உறுதியை இழக்காமல், தாங்கள் விண்ணப்பிக்கும் படிப்புகள் குறித்து அவர்கள் ஏற்கனவே முடிவு செய்து, இந்தப் படிப்புகளைத் தொடர விரும்பும் பல்கலைக்கழகங்களை கண்டறிந்துள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியாகி, பல்கலைக் கழகங்கள் கட்ஆஃப் அறிவித்தவுடன், மாணவர் சேர்க்கை நடவடிக்கை தீவிரமடையும். எணினும் வசதி குறைந்த, எளிமையான குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இது ஒரு சவாலாக இருக்கும். உதாரணமாக, கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய நேரத்தில் கடன் பிராஸஸ் செய்யப்படவில்லை என்றால் வாய்ப்புகளை இழக்க நேரிடும்.


இதற்கிடையில், சிபிஎஸ்இ குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பள்ளி முதல்வர்கள், மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், கவலைப்பட வேண்டிய தேவை இல்லை என்று கூறுகிறார்கள்.


மேலும் படிக்க: இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி - அன்புமணி ராமதாஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ