புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் விக்டோரியன் பிரீமியர் விருதை வென்று இந்திய மாணவிகள் பெருமை சேர்த்துள்ளனர். 2021-22ம் ஆண்டிற்கான சர்வதேச மாணவர் என்ற விருதை திவ்யங்கனா ஷர்மா என்ற இந்திய மாணவி வென்றுள்ளார். இதே கல்வி ஆண்டில் ஆராய்ச்சி பிரிவில் சிறந்த மாணவர் விருதை வென்றார் ரித்திகா சக்சேனாப் என்ற இந்திய மாணவி. இந்த விருதுகள் விக்டோரியாவில் உள்ள சிறந்த சர்வதேச மாணவர்களை பாராட்டும் விக்டோரியா அரசாங்கத்தின் முன்முயற்சியாகும். இதில் ரித்திகா தனது 18 வயதில் மெல்போர்னுக்கு குடிபெயர்ந்தார், இப்போது ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் PhD மாணவியாக உள்ளார் என்று ஆஸ்திரேலியா டுடே பத்திரிக்கை தெரிவித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திவ்யங்கனா உயர்கல்வி பிரிவில் 2021-22 விக்டோரியன் சர்வதேச கல்வி விருதுகளையும் வென்றுள்ளார். பிப்ரவரி 2020 இல் ஹோம்ஸ்க்லென் இன்ஸ்டிடியூட்டில் நர்சிங் படிக்க மெல்போர்னுக்கு வந்த அவர், சர்வதேச மாணாக்கர் என்ற முறையில் படிக்க வந்தால், உலகப் பிரபலமாக மாறிவிட்ட்டார்.


மேலும் படிக்க | அமெரிக்காவில் 4 இந்தியர்கள் கடத்தல்... 2 நாள்களுக்கு பின் உடல்கள் கண்டெடுப்பு


இந்த விருதை வென்றவர்களுக்கு, தங்கள் கல்வி செலவிற்காக, தலா 6,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை கொடுத்து சிறப்பிக்கப்படுவார்கள். அடுத்த இரண்டு ரன்னர்-அப் மாணவர்களுக்கு தலா 2,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை கிடைக்கும் என்பது இதுவரை இருந்த வழ்க்கம்.


 இந்த ஆண்டின் சர்வதேச மாணவர் விருது பெறுபவர்களுக்கு பிரீமியர்ஸ் விருது பரிசுத்தொகையாக 10,000 அமெரிக்க டாலர்கள் கொடுக்கப்படும்.  வெளிநாடுகளில் இந்திய மாணவர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை படிப்பிற்கு அனுப்புவதில் எச்சரிக்கையாக இருக்கும் இந்தியப் பெற்றோருக்கு இந்த விருதுகள் நம்பிக்கைக் தரும்.



வருண் மனிஷ் சேடா என்ற 20 வயதான பர்டூ பல்கலைக்கழக மாணவர் புதன்கிழமை இந்தியானா வளாகத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில், அறையில் தன்னுடன் தங்கியிருக்கும் 22 வயது தோழியால் கொல்லப்பட்டார், கொரியாவைச் சேர்ந்த சேடாவின் அறைத் தோழி, 22 வயதான ஜி மின் இப்போது போலீஸ் காவலில் உள்ளார்.


வெளிநாடுகளில் உயர்கல்வியை மேற்கொள்வது எவ்வளவு பாதுகாப்பானது மற்றும் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் முன் பெற்றோர்களும் மாணவர்களும் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை கேள்வியை இது எழுப்புகிறது.


கனடாவில் உள்ள சுவாமிநாராயண் கோவில் மற்றும் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டி உள்ளிட்ட இந்து மதத்தின் சின்னங்களை சேதப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு, கனடாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 


மேலும் படிக்க | துர்கா பூஜை சிலைக் கரைப்பின் போது ஆற்றில் வெள்ளம்: 7 பேர் பலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ