இந்தியா 6வது முறையாக UNHRC உறுப்பினராக தேர்வு...!!!

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு, UNHRC உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ட்வீட் மூலம் தகவல் அளித்துள்ளது

Last Updated : Oct 15, 2021, 07:35 AM IST
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இந்தியா ஆறாவது முறையாக உறுப்பினரானது.
  • உறுப்பு நாடுகளுக்கு இந்திய மிஷன் நன்றி தெரிவித்துள்ளது.
  • மனித உரிமைகளை பாதுகாப்பதற்க தொடர்ந்து பணியாற்றுவோம் என்று இந்தியா உறுதி
இந்தியா 6வது முறையாக UNHRC உறுப்பினராக தேர்வு...!!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலுக்கு (UNHRC) இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. UNHRC யில் இந்தியாவின் பதவிக்காலம் 2022 முதல் 2024 வரை இருக்கும். உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு மூலம் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று இந்தியா உறுதி கூறியது. UNHRC என்னும் ஐநா மனித உரிமைகள் கவுக்சிலிற்கான உறுப்பு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு, UNHRC யின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ட்வீட் மூலம் தகவல் அளித்துள்ளது. மேலும், இந்தியாவில் நம்பிக்கை வைத்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றி என ட்வீட் செய்துள்ளது.

அர்ஜென்டினா, பெனின், கேமரூன், எரித்ரியா, பின்லாந்து, சாம்பியா, ஹோண்டுராஸ், இந்தியா, கஜகஸ்தான், லிதுவேனியா, லக்சம்பர்க், மலேசியா, மாண்டினீக்ரோ, பராகுவே, கத்தார், சோமாலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இரகசிய வாக்கெடுப்பு மூலம்  UNHRC யின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | டிராஸ் பகுதியில் குடியரசுத் தலைவர் ராணுவ வீரர்களுடன் விஜயதசமி விழா

மனித உரிமைகள் கவுன்சில் என்பது உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக செயல்படும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அமைப்பாகும். இந்த கவுன்சில் 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுக் கவுன்சில் மூலம் உருவாக்கப்பட்டது. முன்னதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இந்த பணியை செய்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் (OHCHR) மனித உரிமைகள் கவுன்சிலின் செயலகமாக செயல்படுகிறது. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது.

UNHRC யின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. அவர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்த கவுன்சிலில் உறுப்பு நாடுகளின் புவியியல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது. இதில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தவிர, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளிலிருந்து 8 உறுப்பினர்களும், மேற்கு ஐரோப்பாவிலிருந்து 7 பேரும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து 6 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

ALSO READ | பாகிஸ்தான் திருந்தவில்லை என்றால், மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அமித் சா எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News