மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவிலுக்கு வஸ்திர மரியாதை செய்ய பழனி மலை முருகன்  கோவில் இருந்து வஸ்திரம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்பு எண் 24 படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதர மாநிலங்கள் மற்றும் இதர நாடுகளில் உள்ள திருக்கோவிலுக்கும் தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கும்  இடையே நல்லிணக்க உறவை மேம்படுத்த வஸ்திர மரியாதை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது.


இதனையடுத்து பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இருந்து மலேசியா பத்துமலை முருகன் கோவிலுக்கு  வஸ்திர மரியாதை செய்ய பழனி முருகன் கோவிலில் இருந்து  இன்று காலை  சிறப்பு குழு புறப்பட்டது.


மேலும் படிக்க | ஆகம மீறலா... சமூகநீதி செயலா... பழனி கோயிலில் நடந்தது என்ன?


முன்னதாக பழனி தண்டாயுதபாணி சுவாமிக் கோவிலுக்கு கட்டுப்பட்ட பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மாலை மரியாதைகள் ஆலயத்தில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன. அதன் பிறகு, மேளதாளம் முழங்க கோவில் யானை கஸ்தூரி முன்னே சென்றது.


அதன் பிறகு, பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் இருந்து வஸ்திரங்கள், மாலை உள்ளிட்ட பொருட்கள் சம்பிரதாய முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கோவில் அறங்காவலர் குழுவினர் அதிகாரிகள் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.


நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின், தமிழக அரசின் 30-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும். அதன்படி நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதங்களில், மானிய கோரிக்கை அறிவிப்பு எண் 24 படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் இந்த பொருட்கள் மலேசியாஅ பத்து மலை முருகன் ஆலயத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சியில் உருவாகும் ராகு-சுக்கிரன் திரிகிரஹி யோகம்..! என்னென்ன பலன்கள்?


மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான இந்துக்கள் வந்து வழிபடும் பிரசித்தி பெற்ற கோவில் பத்துமலை முருகன் கோவில். இங்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள், தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடுவது வழக்கம்.


முருகப் பெருமானின் இந்தக் கோவில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. பத்து மலை முருகன் ஆலயத்தில் குடி கொண்டுள்ள முருகப் பெருமானுக்கு சுப்பிரமணிய சுவாமி என்று பெயர்.


இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோவிலில் இந்துக்கள் தவிர சீனர்களும், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற வேண்டுதல்களை வைத்து, அதற்கான நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்து மதக் கோவிலாக இருந்தாலும், மதப்பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான கோவிலாக அனைவராலும் வணங்கப்படும் பத்துமலைக் குகை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.


மேலும் படிக்க | 22 நாட்களில் நடக்கப்போகும் அபூர்வ பெயர்ச்சி..! 5 ராசிகளுக்கு பம்பர் லாட்டரி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ