இந்தியாவுடன் மிக நெருக்கமான, அமைதியான, நிலையான உறவுகளை கொண்டுள்ள நாடுகளில் ஜப்பானுக்கு முக்கிய இடம் உள்ளது. ஜப்பான் நாட்டின் மீதும், ஜப்பான் மக்கள் மற்றும் அவர்களது கலாச்சாரம் மீதும் இந்தியர்களுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது. ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையே ராஜீய உறவுகள் நிறுவப்பட்டதன் 70வது ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜப்பானின் உணவு, கலை மற்றும் மொழி போன்றவற்றை வெகு காலமாக இந்தியர்களுக்கு பயிற்றுவிக்கும் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களை அங்கீகரித்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் ஒரு பகுதியாக இந்தியா ஜப்பான் இடையே பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதிலும் மற்றும் ஜப்பான் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தற்காகவும் ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி அன்று ABK-AOTS DOSOKAI தமிழ்நாடு மையத்தின் தலைவர் கோவிந்தராஜுலு சந்திரமோகன் என்பவருக்கு ஜப்பான் பாரின் மினிஸ்டரி கமண்டேஷன் விருதை அறிவித்திருந்தது. 


இந்த விருதை அவருக்கு வழங்கும் நிகழ்வு சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் தூதர் ஜெனரல் டாகா மசயுக்கி தலைமையில் தூதரகத்தில் நடைபெற்றது.


இவ்விழாவில் விருதை கோவிந்தராஜுலு சந்திரமோகனுக்கு ஜப்பான் தூதரகத்தின் தூதர் ஜெனரல் டாகா மசயுக்கி வழங்கினார். அப்போது பேசிய அவர், ‘ABK-AOTS DOSOKAI தமிழ்நாடு மையத்தின் தலைவர் கோவிந்தராஜுலு சந்திரமோகன் பல்வேறு தொழில்கள் செய்துவந்தாலும் ஜப்பான் மொழி மீது உள்ள ஆர்வத்தால் தொடர்ந்து ஜப்பானிய மொழியை அவரது நிறுவனம் மூலம் தென்னிந்திய அளவில் அதிகமானவர்களுக்கு கற்று கொடுத்து வருகிறார்.’ என்று கூறினார். அவர் செய்யும் பணிகளுக்காக தூதர் ஜெனரல் டாகா மசயுக்கி அவரை பாராட்டினார்.



மேலும் படிக்க | பாஜகவின் ஊதுகுழலாக செயல்படும் பச்சமுத்துவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும்: ஜிஜி சிவா 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவிந்தராஜுலு சந்திரமோகன், "இந்தியாவில் ஜப்பானிய மொழி படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. உதாரணமாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஜப்பானிய மொழிக்கான திறமை தேர்வில் முன்பெல்லாம் ஆயிரம் பேர் கலந்து கொள்ளவார்கள். ஆனால் தற்பொழுது தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 3,000 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். மேலும் ஜப்பானிய மொழி படித்தவர்களுக்கு இந்தியாவிலும் ஜப்பானிலும் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளது’ என தெரிவித்தார். 


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை ஜப்பான் தூதரகத்தின் கலாச்சாரம் மற்றும் தகவல் பிரிவின் ஆலோசகர் இனோய் மியூக்கி தலைமையிலான குழு செய்திருந்தது.


மேலும் படிக்க | மக்களின் பிரச்னையை பிக்பாஸில் தீர்க்கலாம் என நினைக்கக்கூடாது - கமலை வறுத்தெடுக்கும் வானதி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ