புதுச்சேரி கடற்கரையில் பிரான்ஸ் குழுவினரின் பொம்மலாட்ட நிகழ்வு
பிரெஞ்சு நாட்டில் வசந்தகால திருவிழாவை ஒட்டி புதுச்சேரி கடற்கரையில், பிரெஞ்சு தூதரகத்தால் ராட்சத பொம்மை நடன நிகழ்வு நடத்தப்பட்டது.
வசந்தகாலத் திருவிழாவையொட்டி பிரான்ஸ் நாட்டின் சார்பில் பல்வேறு நாடுகளில் ஏராளமான நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் வசந்த திருவிழாவை முன்னிட்டு பாய்மர அணிவகுப்பை நடத்தினர். அதைத்தொடர்ந்து இன்று கடற்கரைச்சாலையில் பிரமாண்ட பொம்மைகள் அணிவகுப்பும், தமிழிசை பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்வும் நடைபெற்றது.
பல்வேறு தமிழ் திரைப்பட பாடல்களுக்கு ராட்சத பொம்மைகள் நடனமாடியது. ஏற்கெனவே புதுச்சேரியில் பாய்மரக் கப்பல் அணிவகுப்பை நடத்தினர். தொடர்ந்து கடற்கரை சாலையில் ராட்சத பொம்மைகள் அணிவகுப்பும், தமிழிசை பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்வும் நடந்தது.
மேலும் படிக்க | Pegasus Spyware: உளவு பார்க்கும் ஸ்பைவேர் குறித்த பகீர் தகவல்கள்
இந்த நிகழ்வை பிரெஞ்சு துணை தூதர் லிசே டபோட் பரே, அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர். காதல், உற்சாகம், துள்ளல் என பல்வேறு தமிழிசை பாடல்களுக்கு ராட்சத பொம்மைகள் நடனமாடியது. கடற்கரை சாலை காந்தி திடலில் துவங்கி பிரெஞ்சு தூதரகத்தில் இந்நிகழ்வு நிறைவடைந்தது. வசந்தகால திருவிழா கொண்டாட்டம் பிரான்ஸ் நாட்டில் இருக்கும்; அதே கால கட்டத்தில் வழக்கமாக நடக்கும் இந்த நிகழ்ச்சியை கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் நடத்த இயலவில்லை.
இப்பொம்மைக்குள் வெளிநாட்டு கலைஞர்கள் இருந்தப்படி நடன அசைவை செய்ததை பலரும் வரவேற்றனர். கடற்கரை சாலை காந்தி திடலில் புறப்பட்டு பிரெஞ்சு தூதரகத்தில் இந்நிகழ்வு நிறைவடைந்தது.
பிரெஞ்சு தூதரகத்தினர் கூறுகையில், வசந்தகாலத் திருவிழா கொண்டாட்டம் மிக முக்கியமாக பிரான்ஸில் நடைபெறும் என்றும் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் அந்நிகழ்வுகள் மக்கள் முன்னிலையில் உற்சாகத்துடன் நடத்த இயலவில்லை. தற்போது இந்நிகழ்வு நடத்தப்படுகிறது என்று தெரிவித்தனர்.
மேலும் படிக்க | Pegasus: உளவு பார்த்ததாக கூறவில்லை என அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அடித்த பல்டி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR