கொள்ளை வழக்கில் இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவர் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி தமிழகத்துக்கு தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி குழந்தைகள் உட்பட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு நபர்கள் அகதிகளாக தனுஷ்கோடியை அடுத்த மணல் தீடையில் தஞ்சம் அடைந்தனர். தஞ்சம் அடைந்தவர்களை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு கடலோர  காவல் குழுமம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் இந்த அகதிகளில் சிலரைப் பற்றிய திடுக்கிடும் செய்திகள் வெளிவந்தன. அகதிகள் போர்வையில் வந்த கிருபாகரன், சந்திரகுமார் ஆகிய இரண்டு நபர்கள் இலங்கையில் ஒரு நகை கடையின் உரிமையாளரை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் அங்கிருந்து தப்பி அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்தது தெரியவந்தது.



இதனை அடுத்து அவர்கள் இருவரையும் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தற்போது கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.



 மேலும் விசாரணைக்கு பின்னர் இரண்டு நபர்களும் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பி வைக்கப்படுவார்களா? அல்லது இங்கேயே வழக்கு ஏதும் பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்களா என்று போலீஸாரின் முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.


மேலும் படிக்க | பெங்களூரில் கைது செய்யப்பட்ட உறவினர்களை விடுவிக்க கோரும் இலங்கைவாழ் தமிழர்கள் 


இந்த நிலையில், அகதிகளாக தமிழகத்துக்கு வந்தவர்களின் மற்றொரு வினோதமான செய்தியும் வெளிவந்துள்ளது. அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தவர்கள் நடுக்கடலில் இறக்கி விடப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 


இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தப்பி வந்தவர்கள் நடுக்கடலில் இறக்கி விடப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். அந்த வகையில், சமீபத்தில் 6 பேர் அகதிகளாக தமிழகத்திற்கு வந்த  நிலையில் இந்திய கடல் பகுதி  எனத் தெரிவித்து நடுக்கடலில் அவர்கள் இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது. 


மன்னாரில் இருந்து படகு வழியாக தப்பி வந்தவர்கள், ஒரு மணல் திட்டில், அது இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மணல் திட்டு எனத் தெரிவித்து  தரை இறக்கி விடப்பட்டுள்ளனர். இதனையடுத்து அகதிகள் நின்ற இடம்  இந்தியாவின் ஆளுகை கரையோரம் அல்ல, இலங்கை ஆளுகைப் பிரதேசம் எனத் தெரிய வந்துள்ளது.


 இதனையடுத்து இலங்கை கடற்படை சம்பவ இடத்திற்குச் சென்று நடுக்கடலில் நின்ற ஆறுபேரையும் கைது செய்து மன்னார் போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


மேலும் படிக்க | ராமேஸ்வரத்தை சேர்ந்த ஆறு மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ