சிங்கப்பூர்: திங்கட்கிழமை (ஜூலை 4) இரவு, டாம்பைன்ஸ் ரீடெய்ல் பூங்காவில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி, அங்கிருந்த நபரை முகக்கவசம் அணியச் சொன்னதால், அந்த நபர் அதிகாரியை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிங்கப்பூர் பாதுகாப்புச் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், திங்கள்கிழமை இரவு சுமார் 10.20 மணியளவில் டாம்பைன்ஸ் ரீடெய்ல் பூங்காவில் உள்ள ஜெயிண்ட் ஹைபர்மார்ட்-ன் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் பெருமாள் பணியில் இருந்ததாகக் கூறியது.


பாதுகாப்புக்கான நிர்வாக நடவடிக்கைகளின்படி கட்டிடத்திற்குள் நுழையும் மக்கள் தங்கள் முகக்கவசங்களை அணிந்திருப்பதை உறுதி செய்வது அவரது கடமைகளில் ஒன்று என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


சுரேஷ் பெருமாள் பணியில் இருந்தபோது, ​​முகக்கவசம் அணியாத ஒரு நபர் கட்டிடத்தை நெருங்குவதைக் கண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த நபரிடம் முகக்கவசம் அணியுமாறு கூறிய சுரேஷ், முகக்கவசம் இல்லையென்றால், கட்டிடத்தின் வாசலில் உள்ள மருந்தகத்தில் ஒன்றை வாங்குமாறு தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | 8.5 கிலோ தங்கம், கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்: கொழும்பில் கைதான இரண்டு இந்தியர்கள் 


இருப்பினும், முகக்கவசம் அணியாததற்காக பாதுகாப்பு அதிகாரி தன்னை வெளியே போகச்சொன்னதால், சினம் கொண்ட அந்த நபர், கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு சுரேஷை சில மோசமான வார்த்தைகள் கொண்டு திட்டியதாக சிங்கப்பூர் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.


"சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த நபர் திடீரென கட்டிடத்திலிருந்து வெளியேறினார். மேலும் முன்னறிவிப்பின்றி, எஸ்.ஓ. சுரேஷைத் தள்ளினார். அவரை அநாகரீகமாக பேசினார். பின்னர் அவர் எஸ்ஓ சுரேஷை தள்ளவும், குத்தவும் தொடங்கினார்," என்று சங்கம் கூறியது.


தாக்குதலின் காரணமாக பாதுகாப்பு அதிகாரிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சங்கம் வழங்கிய வீடியோவில், அணிந்த ஒரு நபர், கார் பார்க்கிங்கில் பாதசாரி கடவைக்கு அருகில் பாதுகாவலரைத் தள்ளுவதையும், குத்துவதையும் காண முடிகிறது. 


சிறிது நேரம் கழித்து பொதுமக்களில் இருவரும் ஒரு ஊழியரும் பாதுகாப்பு அதிகாரிக்கு உதவி செய்வதைக் காண முடிகின்றது. 


இந்த சம்பவம் தொடர்பாக, மனநலச் சட்டத்தின் கீழ் 57 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஒரு பாதுகாப்பு அதிகாரியை தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக அந்த நபர் விசாரிக்கப்படுவார். போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.


"தங்கள் கடமைகளைச் செய்யும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக எந்தவொரு தவறான நடத்தையையும் காவல்துறை கடுமையாகக் கருதுகிறது. மேலும் இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்" என காவல்துறை தெரிவித்துள்ளது.


சிங்கப்பூர் பாதுகாப்புச் சங்கம், இந்தச் சம்பவத்தை "தேவையற்ற புத்தியில்லாத மற்றும் வன்முறையான துஷ்பிரயோகச் செயல்" என்று கண்டனம் செய்தது. 


சுரேஷ் பாதுகாப்பு நிறுவனமான ட்வின்ராக்கில் பணிபுரிகிறார். செக்யூரிட்டி அசோசியேஷன் சிங்கப்பூர் மற்றும் ட்வின்ராக் ஆகியவை சுரேஷுக்கு தொடர்ந்து உதவி செய்யும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | மன்னார்: தனியார் பேருந்து சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம், மக்கள் அவதி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR