கடந்த வாரம், புதிய வெளிநாட்டு நெட்வொர்க்குகள் மற்றும் நிபுணத்துவம் (ONE), புதிய பணி அனுமதி ஆகியவற்றை சிங்கப்பூர் அறிமுகப்படுத்தியது. இது சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை எளிதாக்குகிறது. இந்த புதிய அனுமதியின் மூலம், மாதத்துக்கு குறைந்தபட்சம் 30,000 சிங்கப்பூர் டாலர்கள் சம்பாதிக்கும் வெளிநாட்டவர்கள் ஐந்தாண்டு பணிக்கான அனுமதியைப் பெற அனுமதி கிடைக்கும். இதில் அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கு பணி தேடவும் அனுமதி கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊதிய அளவுகோல்களை பூர்த்தி செய்யாத விளையாட்டு, கலை, அறிவியல் மற்றும் கல்வித்துறையில் உள்ள விதிவிலக்கான நபர்களும் இதற்கு தகுதியுடையவர்கள். இந்த விண்ணப்பதாரர்களுக்கான நிபந்தனைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


"வணிகங்கள் மற்றும் திறமைகள் என இரு அம்சங்களை சார்ந்தவர்களும் முதலீடு செய்வதற்கும், வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் பாதுகாப்பான மற்றும் நிலையான இடங்களைத் தேடுகின்றன. சிங்கப்பூர் அத்தகைய இடம்" என்று சிங்கப்பூரின் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.


சிங்கப்பூர் அதன் புதிய பணி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தாது. விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் மற்றும் நிதி, கலை, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை ஈர்க்கும் முயற்சிகளைக் குறிப்பிட்ட டான், இந்த துறைகளில் முன்னேற்றத்தை கொண்டு வருபவர்களை ஈர்க்க தாங்கள் ஆசைப்படுவதாக தெரிவித்தார். 


மேலும் படிக்க | NRI Investment Options: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான டாப் முதலீட்டு திட்டங்கள் 


புதிய பணி அனுமதி ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது.


தகுதி வரம்பு


ஏற்கனவே பணி அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள ஊதிய அளவுகோல்களில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்தால் விண்ணப்பிக்கலாம்:


- கடந்த 1 வருடத்திற்குள் குறைந்தபட்சம் 30,000 சிங்கப்பூர் டாலர் அல்லது வெளிநாட்டு நாணயத்தில் அதற்கு இணையான நிலையான மாதச் சம்பளத்தைப் பெற்றிருக்க வேண்டும்.


- சிங்கப்பூரில் தங்களுடைய எதிர்கால முதலாளியின் கீழ் குறைந்தபட்சம் 30,000 சிங்கப்பூர் டாலர் நிலையான மாதச் சம்பளத்தைப் பெறுவார்கள்.


மேலும், வெளிநாட்டில் இருந்து விண்ணப்பிப்பவர்கள், தாங்கள் வெளிநாட்டில் ஒரு 'நிறுவப்பட்ட நிறுவனத்தில்' குறைந்தபட்சம் 1 வருடமாவது பணிபுரிந்து வருவதையோ அல்லது சிங்கப்பூரில் உள்ள 'நிறுவப்பட்ட நிறுவனத்தில்' பணிபுரிய உள்ளார்கள் என்பதையோ நிரூபிக்க வேண்டும்.


நிறுவப்பட்ட நிறுவனம் (எஸ்டேப்லிஷ்ட் கம்பனி) என்றால் என்ன?


ஒரு நிறுவனம் நிறுவப்பட்டதாகக் கருதப்படுவதற்கு, குறைந்தபட்சம் US$500 மில்லியன் சந்தை மூலதனம் அல்லது குறைந்தபட்சம் US$200 மில்லியன் வருடாந்திர வருவாய் இருக்க வேண்டும்.


ONE (The Overseas Networks & Expertise) பாஸைப் புதுப்பிக்க முடியுமா?


வெளிநாட்டு நெட்வொர்க்குகள் & நிபுணத்துவ பாஸ் ஒவ்வொரு முறையும் 5 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கத்தக்கது. புதுப்பித்தலுக்குத் தகுதிபெற, பாஸ் வைத்திருப்பவர் பின்வருவனவற்றில் ஒன்றை உறுதி செய்யவேண்டும்:


- சிங்கப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக குறைந்தபட்சம் S$30,000 நிலையான மாதச் சம்பளத்தைப் பெற்றிருக்க வேண்டும். 


- சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வரு வேண்டும். இதில் குறைந்தது 5 உள்ளூர்வாசிகள் பணிபுரிய வேண்டும். 


உங்கள் குடும்பத்தை அழைத்து வர முடியுமா?


உங்கள் குடும்பத்தை அழைத்து வர, அந்தந்த பாஸ்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்:


சார்ந்திருப்பவருக்கான பாஸ் (Dependant’s Pass)


- மனைவி (சட்டப்படி திருமணம் செய்து கொண்டவர்)
- 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத குழந்தைகள் (சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்டவர்கள் உட்பட)


நீண்ட கால விசிட் பாஸ் (Long-Term Visit Pass)


- காமன் லா - கணவன் / மனைவி 


- 21 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஊனமுற்ற குழந்தைகள்


- 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத வளர்ப்புப் பிள்ளைகள்


- பெற்றோர்


ஆதாரம்: சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம்


மேலும் படிக்க | சீனாவில் மருத்துவம் படிக்கத் திட்டமா... இந்த செய்தி உங்களுக்குத் தான்..!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ