சிங்கப்பூர் வாழ் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி!! நாட்டில் குரங்கம்மையால் இரண்டாவது மற்றும் மூன்றாவது நபர்கள் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், அதாவது ஒரு நாள் இடைவெளியில் பாதிக்கப்பட்டுள்ளதை சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. சிங்கப்பூரில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் பற்றிய தகவல் ஜூலை 6 அன்று உறுதி செய்யப்பட்டது. குரங்கம்மை என்பது மங்கி பாக்ஸ் வைரஸின் தொற்று காரணமாக ஏற்படும் ஒரு வைரஸ் நோயாகும். பெரும்பாலான நோயாளிகள் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் நோய்த்தொற்றிலிருந்து குணமடைவார்கள். குரங்கம்மையின் சில அறிகுறிகளில் பொதுவாக காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, வீங்கிய நிணநீர் முனைகள், குளிர், சோம்பல் மற்றும் தோல் வெடிப்பு ஆகியவை அடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், இந்த வைரஸ் கடுமையான சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும். இளம் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள், கடுமையான நோய்களால் தாக்கப்படும் ஆபத்தில் உள்ளவர்கள் ஆகியோர் அதிக ஆபத்தில் உள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. 


இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து டஜன் கணக்கான நாடுகளில் குரங்கம்மையால் மக்கள் பாதிக்கப்படுவது துவங்கிய நிலையில், சிங்கப்பூரில் முதல் நபர் பாதிக்கப்பட்டது ஜூலை 6 அன்று உறுதிசெய்யப்பட்டது. சிங்கப்பூரில் குரங்கம்மையால் முதலில் பாதிக்கப்பட்ட நபர் 45 வயதான ஒரு மலேசியர் ஆவார். இரண்டாவதாக பாதிக்கப்பட்டவர் சிங்கப்பூரில் வசிக்கும் 48 வயதான பிரிட்டிஷ் நாட்டவர். அவருக்கு ஜூலை 13 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியது. 


மேலும் படிக்க | கேரளாவில் குரங்கு அம்மை - தடுப்பூசியும் சிகிச்சை முறையும்! 


அந்த நபருக்கு ஜூலை 6 அன்று பெரியனல் பகுதியில் சொறி ஏற்பட்டதாகவும், ஜூலை 11 அன்று காய்ச்சல் ஏற்பட்டதாகவும், அவர் ஜூலை 13 அன்று மருத்துவ உதவியை நாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதே நாளில் அவர் NCID யில் அனுமதிக்கப்பட்டார். தொடர்புத் தடமறிதல் நடந்து கொண்டிருக்கிறது என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 


சிங்கப்பூரில் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ள மூன்றாவது நோயாளி 41 வயதான சிங்கப்பூர் குடிமகன் ஆவார். அவருக்கு வியாழக்கிழமை (ஜூலை 14) தொற்று உறுதி செய்யப்பட்டது. மற்ற இருவரைப் போலவே அவரும் என்சிஐடியில் சிகிச்சையில் உள்ளார். இவருக்கு ஜூலை 9 அன்று பிறப்புறுப்புகளில் வெடிப்புகள் உருவானது என்றும், அவர் ஜூலை 12 அன்று மருத்துவ உதவியை நாடினார் என்றும் ஜூலை 13 அன்று NCID யில் அனுமதிக்கப்பட்டார் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


குரங்கம்மை பொது மக்களுக்கு பரவும் ஆபத்து குறைவாகவே உள்ளது என்றும் இது பரவுவதற்கு நெருக்கமான உடல் ரீதியான அல்லது நீண்ட நேர தொடர்பு தேவைப்படுகிறது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குரங்கம்மையை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்றும் இதற்கு தேவையான தயார்நிலை நிவாரண நடவடிக்கைகளை அரசு அவப்போது எடுக்கும் என்றும் அமைச்சகம் மேலும் கூறியது. பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும், குறிப்பாக பயணத்தின் போது நல்ல சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிந்த அல்லது சந்தேகிக்கப்படும் நபர்கள் பிற நபர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.


மேலும் படிக்க | Monkeypox virus: குரங்கு காய்ச்சலை Pandemic என்று குறிப்பிதிட்ட WHN 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ