இலங்கையிலிருந்து அகதிகளாக 6 வயது குழந்தை உட்பட இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடி வருகை


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பால், காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்து வாங்க வழியின்றி அங்குள்ள மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதை அடுத்து இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் அகதிகளாக இந்தியா மற்றும் அண்டை நாடுகளுக்கு செல்லும்போது  அவர்களை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தி கைது சம்பவமும் நடைபெற்று வருகிறது. அங்குள்ள மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும், தங்களது எதிர்ப்பை தெரிவித்ததால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது புதிய ஆட்சியும் நடந்து வருகிறது. 


மேலும் படிக்க | இலங்கைக்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை வழங்குவோம்: உறுதியளித்த இந்திய குழு 


அப்படியும் இன்னும் பொருளாதார சிக்கலில் இருந்து மீள முடியாமல்  மக்கள் திணறி வருகின்றனர். ஏற்கனவே இலங்கையில் வாழும் தமிழர்கள் வாழ வழியின்றி 25 குடும்பங்களைச் சேர்ந்த 92 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில்,


 இன்று இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஆறு வயது குழந்தை உட்பட நான்கு பேர்  இலங்கையில் வாழ வழியின்றி கடலில் ஆபத்தான முறையில் பயணம் செய்து இந்தியா இலங்கைக்கு இடையில் உள்ள ஏழாம் தீடையில் வந்து இறங்கி உள்ளனர்.


அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தனுஷ்கோடி பகுதியை சேர்ந்த மீனவர்கள்  அகதிகள் அங்கு தவித்துக் கொண்டிருந்ததை பார்த்த பின்பு  கடலோர  காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, பின்னர் மீனவர்கள் தங்கள் மீன் பிடித்தும் படகுகளில் மீன்களை பிடிப்பதை நிறுத்திவிட்டு  இலங்கை அகதிகளை காப்பாற்றும் விதமாக நான்கு பேரையும் படகில் அழைத்து வந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைப் பகுதியில் கொண்டு வந்து விட்டனர்.


அங்கு நின்ற கடலோர காவல் குழும போலீசார் அவர்களை தனுஷ்கோடி கடலோர காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் நான்கு பேரும் மண்டபம் அகதிகள் முகாமில்  தங்க வைக்கப்படுவார்கள்.


 இதுவரை இலங்கையில் இருந்து அகதிகளாக 27 குடும்பத்தைச் சேர்ந்த  96 பேர்  தமிழகம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | தமிழகம் ஊடுருவ முயலும் முன்னாள் விடுதலைப்புலிகள்: வெளியான உளவு தகவல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR