செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆப்பூர் சேந்தமங்கலம் சாலையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கழுத்து, காது அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மிரண்டு போயிருக்கிறார்கள். உடனே இது தொடர்பாக செங்கல்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் மூதாட்டி துடிதுடிக்க கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. ஆனால் மூதாட்டி யார்? எங்கிருந்து வந்தார் ? என்பது குறித்த தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது.
அதே சமயத்தில்தான் தாம்பரம் அடுத்துள்ள கூடுவாஞ்சேரியில் லட்சுமி என்ற மூதாட்டி காணாமல் போயிருக்கிறார். கோயிலுக்கு சென்றுவிட்டு வருவதாக வீட்டை விட்டு கிளம்பிய மூதாட்டி வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் பயந்துபோன மூதாட்டியின் குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர். அப்போதுதான் தெரியவந்தது கொலை செய்யப்பட்டு கிடந்ததும், காணாமல் போன மூதாட்டியும் ஒருவர்தான். உடனே உறவினர்களுக்கு சொல்லி அனுப்பி மூதாட்டியின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது மூதாட்டி அணிந்திருந்த நகைகள் திருடு போயிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா ? இல்லை வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மூதாட்டி சென்ற முத்து மாரியம்மன் கோயில் இருக்கும் பகுதிக்கு சென்ற போலீசார் விசாரணை செய்ததில் சம்பவத்தன்று வீட்டில் விட்டுவிடுவதாக கூறி ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது வண்டியில் மூதாட்டியை ஏற்றியிருக்கிறார். ஆனால் அதன்பின் என்ன ஆனது மூதாட்டி என்று யாருக்கும் தெரியாமல் போனது.
இந்நிலையில் மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றிய டிரைவர் பிடித்து விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். அதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருக்கும் ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், விசாரணையில் முடிவில்தான் மூதாட்டியின் கொலைக்கான காரணங்கள் குறித்து வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மனைவியை தம்புள்ஸால் அடித்துக் கொலை செய்த கணவன்.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR