இலங்கையில் நிலவி வரும் உணவு பஞ்சம், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக,  கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் விசைப்படகு மூலம் ஆபத்தான முறையில்  வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட 51 இலங்கையர்கள் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு மத்தியில் 30 வருட யுத்தத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த மக்கள் தற்போது மீண்டும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். ஆட்சி மாறினாலும் அவர்களது இன்னல்கள் இன்னும் குறையவேயில்லை. 


பொருளாதார வீழ்ச்சி காரணமாக, இலங்கையில் தற்போது, அந்நாட்டு அரசுக்கு எதிராக நாள்தோறும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு உணவு பொருள் மட்டும் எரிபொருள்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து சட்டவிரோதமாக தப்பிச் சென்று வெளிநாடுகளில் குடியேறுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் தினந்தோறும் ரோது பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க |  முல்லைத்தீவு கடலை ஆக்கிரமிக்கும் இந்திய இழுவைப்படகுகள்; எதிர்க்கும் இலங்கை மீனவர்கள்


இந்த நிலையில் இன்று காலை திரிகோணமலை கடற்பரப்பில் ரோந்து சென்ற போது அவ்வழியே வந்த மீன்பிடி  விசைப்படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், அதில், சோதனை செய்த போது 41 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் என சந்தேகத்திற்கிடமான முறையில் 51 பேரும் சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லும் நோக்கில் அந்த படகில் பயணித்தது தெரியவந்துள்ளது.


இதனை அடுத்து அவர்களை கைது செய்த விசாரித்த போது, அவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து முதல் 56 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களை எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்காக திரிகோணமலை துறைமுக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | தமிழகம் ஊடுருவ முயலும் முன்னாள் விடுதலைப்புலிகள்: வெளியான உளவு தகவல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR