ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு நல்ல செய்தி!! அமீரகத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் வரும் வாரங்களில் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில்லறை எரிபொருள் விலை குறைக்கப்பட்டது, உலகளாவிய பொருட்களின் விலைகளில் சரிவு மற்றும் சில பொருட்களின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டது என இந்த காரணங்களால் விலைகள் குறைந்துள்ளதாக உள்ளூர் சில்லறை விற்பனையாளர்கள் கூறுகின்றனர். உக்ரைனில் இருந்து கோதுமை, தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய்கள் ஏற்றுமதி தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவும் சர்க்கரை ஏற்றுமதி மீதான தடையை தளர்த்தியுள்ளது. இது உள்ளூர் சில்லறை விலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இது  நாட்டில் பணவீக்கத்தை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் நாட்டில் உள்ள நுகர்வோருக்கு நேரடியான பலன்கள் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உக்ரைனிலிருந்து ஏற்றுமதி இப்போதுதான் தொடங்கிவிட்டது. இதன் விளைவால் விலைகள் இன்னும் ஒரு வாரத்தில் குறைக்கப்பட்டு அதன் விளைவு மகக்ளுக்கு உதவத் தொடங்கும். சமையல் எண்ணெய் மற்றும் உணவு தானியங்கள் ஆகியவை இரண்டு மிக முக்கியமான பொருட்களாகும். அவை 30 சதவீதம் வரை வீழ்ச்சியைக் காணும். ஏனெனில் இரண்டிலும் அதிக இருப்புக்கள் உள்ளன.


பிப்ரவரியில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் துவங்கியதில் இருந்து, உணவுப் பொருட்களின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக அடிப்படை உணவுப் பொருட்களின் விலைகளில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் துருக்கி மத்தியஸ்தம் செய்த நிலையில், ரஷ்யாவும் உக்ரைனும் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு சம்மதித்துள்ளன. 


மேலும் படிக்க | UAE: திர்ஹமிற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை உற்று நோக்கும் NRI 


ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டும் உணவுப் பொருட்களின் முக்கிய உற்பத்தியாளர்களாகும். இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் குறைவது ஏற்றுமதியை அதிகரிக்கும். இதன் மூலம் அடிப்படை பொருட்களின் விலைகளும் குறையும். 


உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஜூலை மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. எஃப்எஓ- இன் தரவு பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், கோதுமை, தானியங்கள், கோர்ஸ் தானியங்கள், மக்காச்சோளம் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலைகளின் தரவுகளைக் காட்டியுள்ளது.


அதன் உணவு விலைக் குறியீடு ஜூலை மாதத்தில் 8.6 புள்ளிகள் சரிந்து 140.9 ஆக இருந்ததாக ஐநா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் காய்கறி விலைக் குறியீடு 19.2 சதவீதம் குறைந்துள்ளது. தானியங்களின் விலைக் குறியீடு கடந்த மாதம் 11.5 சதவீதம் சரிவைக் கண்டது. உலக கோதுமை விலை 14.5 சதவீதம் குறைந்தது. சோளத்தின் விலை 10.7 சதவீதம் சரிவைக் கண்டது. சர்க்கரை விலைச் சுட்டெண் ஏறக்குறைய நான்கு சதவீதம் சரிந்தது.


உக்ரைனில் இருந்து கோதுமை மற்றும் பிற பொருட்களின் ஏற்றுமதி விலையில் அழுத்தத்தை குறைக்கும் என்றும் இது மக்களுக்கு பயனளிக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். கூடுதலாக, ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை எரிபொருள் விலை குறைப்பு போக்குவரத்து நிறுவனங்களின் சுமையை குறைக்கும்.


இந்தியா இப்போது ஏற்றுமதியை அனுமதித்துள்ளதால் சர்க்கரை விலை குறையும் என்று கூறப்படுகிறது. "சர்க்கரை விலை 25 சதவீதத்திற்கும் அதிகமாக குறையும். ஏனெனில் இந்தியா இதற்கு முன்பு சர்க்கரையை தடை செய்தபோது, ​​​​விலை 20 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தன. சப்ளை மீண்டும் தொடங்கியதும், இந்திய சர்க்கரையின் விலையும் குறையும்,” என்று சந்தை வல்லுனர்கள் கூறியுள்ளார்கள். 


மேலும், ஐக்கிய அரபு அமீரகம் ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையை லிட்டருக்கு 60 ஃபில்ஸ் குறைத்துள்ளது. இது போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைக்கான செலவுகளைக் குறைக்கும்.


மேலும் படிக்க | UAE: வரலாறு காணாத மழைக்கு பிறகு குவியும் இன்ஷ்யூரென்ஸ் கிளைம்கள் 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ