சர்வதேச அளவில் பிரபலமாகி வரும் UPI  என்னும் பண பரிவர்த்தனை அமைப்பு, பணம் செலுத்துவதற்கான மிக எளிய டிஜிட்டல் முறையாகிவருகிறது. இந்தியாவில் அனைவராலும் விரும்பப்பட்டு, கிராமங்களிலும் இன்று பரவலாக பயன்படுத்தப்படும் UPI பேமெண்ட் அமைப்பு பல நாடுகளிலும் பிரபலமாகியுள்ளது. துரிதமாக பணம் செலுத்துவதற்கான எளிதான வழியாக இருக்கும் இந்த முறையை, வெளிநாடு வாழ் இந்தியர்களும் பயன்படுத்தலாம் என்பது நல்ல செய்தி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

10 நாடுகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) இந்த UPI சேவையை பயன்படுத்தும் வாய்ப்பை யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) வழங்கியுள்ளது.   


மேலும் படிக்க | 10 நாடுகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு UPI சேவை!!


பரவலாக்கப்படும் யுபிஐ சேவைகள்


இந்த ஆண்டு ஜனவரி பத்தாம் தேதியன்று அரசு வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையின்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்துவதற்காக அவர்களின் சர்வதேச மொபைல் எண்களைப் பயன்படுத்தலாம். என்ஆர்ஐ-கள் மத்தியில் யுபிஐ பணப்பரிமாற்றத்தை ஊக்குவிப்பதில் இந்த நடவடிக்கை மிகவும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். 


இந்தியாவின் தொலைபேசி எண் இல்லாமலேயே, இந்திய வங்கிக்கணக்குகளிலிருந்து இந்திய வணிகர்கள் மற்றும் பிறருக்கு பணம் செலுத்த, என்.ஆர்.ஐகளுக்கு உதவும் நோக்கத்தில் இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.  


UPI செலுத்தும் முறை 
யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது பல வங்கிக் கணக்குகளை ஒரே மொபைல் செயலியில் (எந்தவொரு பங்கேற்பு வங்கியிலும்) இணைக்கும் அமைப்பாகும், பல வங்கி அம்சங்கள், தடையற்ற நிதி ரூட்டிங் & வணிகர் பணம் ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது.


வெளிநாட்டவர்கள் UPI ஐடியைப் பெற முடியுமா?
தற்போது, UPI ஐடியைப் பெற இந்திய மொபைல் எண் தேவைப்படுகிறது. UPI ஐச் செயல்படுத்த, Paytm போன்ற செயலிகளை பயனர் பயன்படுத்தும்போது, அந்த மொபைல் எண் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய, ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். சர்வதேச ரோமிங்கின் அதிக செலவு காரணமாக, வெளிநாட்டினர் தங்கள் இந்திய எண்களை வைத்திருப்பதில்லை என்பதால், வெளிநாட்டினருக்கு இந்த சேவைகள் ஒத்துப்போவதில்லை.


மேலும் படிக்க | Golden Visa: முதலீட்டை ஈர்த்த கோல்டன் விசாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐரோப்பிய நாடு!


எந்த 10 நாடுகளில் UPI உள்ளது?
2023 ஏப்ரல் மாதம் 30ம் தேதி முதல், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச மொபைல் எண்கள் மூலம் UPI பரிவர்த்தனை வசதியைப் பயன்படுத்தலாம். இது குடியுரிமை இல்லாத NRE) மற்றும் குடியுரிமை இல்லாத சாதாரண NRO கணக்குகள் மூலம் கிடைக்கும்.


எந்த நாடுகள் இந்தியா UPIஐ ஏற்கின்றன?
NPCI ஆனது USA, UK, சிங்கப்பூர், UAE மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட மொபைல் எண்களிலிருந்து UPI பரிவர்த்தனைகளை இயக்கியுள்ளது. NRE/NRO போன்ற சர்வதேச மொபைல் எண்களைக் கொண்ட குடியுரிமை இல்லாத கணக்கு வகைகள் இப்போது UPI உடன் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிவித்தது.


நேபாளம், சிங்கப்பூர், பூட்டான், இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது என MeitY செயலாளர் அல்கேஷ் குமார் ஷர்மா கூறினார். மேலும் யுபிஐ உலகளாவிய கட்டண முறைமையாக மாற வேண்டும், இதற்காக NPCI ஏற்கனவே இந்த நாடுகளுடன் ஒத்துழைக்கத் தொடங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | UPI- PayNow: வெளிநாடு வாழ் இந்தியர்கள் எளிதாக குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்பலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ