தாயகத்தின் வேர்களை மறவாத மருத்துவர் உமா கவினி! படித்த கல்லூரிக்கு ₹20 கோடி நன்கொடை
NRI Donation To College: அமெரிக்காவைச் சேர்ந்த என்ஆர்ஐ மருத்துவர், ஆந்திர அரசு மருத்துவக் கல்லூரிக்கு, தனது வாழ்நாள் சேமிப்பான 20 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்... தாயகத்தின் வேர்களை மறவாத மருத்துவர் உமா கவினி! நன்கொடை
குண்டூர்: அமெரிக்காவைச் சேர்ந்த என்ஆர்ஐ மருத்துவர், ஆந்திர அரசு மருத்துவக் கல்லூரிக்கு, தனது வாழ்நாள் சேமிப்பான 20 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார். ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாக, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்பான சுமார் ரூ. 20 கோடியை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கினார். டாக்டர், உமா தேவி கவினி என்பவர், குண்டூரை பூர்வீகமாகக் கொண்டவர் மற்றும் 1965ம் ஆண்டு, குண்டூர் அரசு மருத்துவக் கல்லூரி GMCஇல் மருத்துவப் படித்து படித்தார். கல்வியை முடித்த பிறகு, அவர் அமெரிக்காவிற்குச் சென்று, கடந்த நான்கு தசாப்தங்களாக நோய் எதிர்ப்பு நிபுணர் மற்றும் ஒவ்வாமை நிபுணராக அங்கு பணியாற்றி வருகிறார்.
தனது வேர்களை மறாக்காத அவர், டெக்சாஸின் டல்லாஸை தளமாகக் கொண்ட குண்டூர் மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம், வட அமெரிக்கா (GMCANA) இன் செயலில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் 2008 இல், அந்த அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த மாதம் டல்லாஸில் நடைபெற்ற குண்டூர் மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் கூட்டத்தில், GGH பொதுமக்களுக்கு கணிசமான நன்கொடை வழங்க டாக்டர் உமா விருப்பம் தெரிவித்தார்.
மேலும் படிக்க | இந்து முறைப்படி இஸ்லாமியருக்கு இறுதிச்சடங்குகள்! சவுதி அரேபிய NRI குடும்பம் வருத்தம்
தற்போது டாக்டர் உமா கவினி, குண்டூர் அரசு பொது மருத்துவமனையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு தனது ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கொடுத்துள்ளார். ஜிஜிஹெச்சில் புதிதாக கட்டப்பட்டுள்ள தாய்சேய் நலக் கட்டிடத்திற்கு இந்த நன்கொடை பயன்படுத்தப்படுகிறது. டாக்டர் உமா கவினியின் கணவர், இரண்டு ஆண்டுகளுக்கு இறந்துவிட்டார்.
கடந்த, 2008ல், "ஜிம்கானா" என்ற குண்டூர் மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராக டாக்டர் உமா கவினி இருந்தார். தற்போது ஜிம்கானா உறுப்பினர்கள் குண்டூர் அரசு மருத்துவ மனையின் MCH பிரிவுக்கு டாக்டர் உமா கவினியின் பெயரை வைக்கலாம் என்று முன்மொழிந்தனர், இது அவரது நன்கொடையுடன் கட்டப்பட்டது, ஆனால் அதற்கு உமா கவினி ஒத்துக் கொள்ளவில்லை.
மேலும் படிக்க | அயோடின் மாத்திரைகள் அணுகுண்டு தாக்குதலை தடுக்குமா? விற்பனை மும்முரம்
அதன்பிறகு, அவரது மறைந்த கணவரின் நினைவாக தொகுதிக்கு "டாக்டர் கனூரி ராமச்சந்திர ராவ்" என்ற பெயரை வழங்க முடிவு செய்யபப்ட்டது. கர்நாடக மாநிலம் குல்பர்காவில் அவரது கணவர் மயக்க மருந்து நிபுணராகவும், மருத்துவராகவும் பணியாற்றினார்.
டாக்டர் உமாவின் நன்கொடை, பல மருத்துவர்களுக்கு உத்வேகம் கொடுத்துள்ளது. டாக்டர் சூரப்பனேனி கிருஷ்ணபிரசாத் ரூ.8 கோடி நன்கொடையும், தெள்ளா நளினி மற்றும் வெங்கட் என்ற தம்பதி ரூ.8 கோடி நன்கொடை அளிக்க முன்வந்தனர். டாக்டர் மொவ்வா வெங்கடேஷ்வர்லு 20 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இவர்களைத் தவிர, குண்டூர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் இந்த புதிய கட்டடத்திற்காக நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளனர். ஆந்திர மாநில தாய்சேய் நலத்துறை ரூ.86 கோடி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஐநாவில் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை இந்தியா நிராகரித்தது ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ