OnePlus நிறுவனத்தின் OnePlus 6 மொபைல் ஆனது இன்று மும்பையில் வெளியிடப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தன் கேமிராக்களால் தனிப் பெருமையுடன் வெளிவரும் OnePlus நிறுவனத்தின் OnePlus 6 மொபைல் ஆனது இன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது. மும்பையில் நடைப்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு மொபைலின் செயல்திறன் குறித்து அறிந்துக்கொண்டனர்.


OnePlus நிறுவனத்தின் முந்தைய OnePlus 5T -வை காட்டிலும் இந்த OnePlus 6 ஆனது சற்று கூடுதல் விலையுடன் இருக்கும் என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த போனின் விலை வெளியாகியுள்ளது.


OnePlus 6 ஆனது இரண்டு வகைகளில் வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி...


  • 6GB + 64 GB  நினைவகத்துடன் வெளிவரும் OnePlus 6 ஆனது Rs 34,999  எனவும்,

  • 8GB + 128 GB  நினைவகத்துடன் வெளிவரும் OnePlus 6 ஆனது Rs 39,999 எனவும்,



மேலும், இந்த மொபைலின் சந்தைக்கு முந்தைய விற்பனையானது நியார்க், லண்டன், பேரிஸ், மில்லன் மற்றும் பெல்ஜியங்கில் நடைப்பெற்றது. இதனையடுத்து இந்தியாவில் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


OnePlus 6 சிறப்பம்சங்கள்...


  • Dual Sim, VoLTE, 4G, 3G, Wi-Fi, NFC

  • Octa Core, 2.45 GHz Processor

  • 6 GB RAM, 64 GB inbuilt

  • 3300 mAh Battery

  • 6.01 inches, 1080 x 2160 px display

  • 16 MP Dual Rear + 16 MP Front Camera

  • Android, v7.1.1