மோடி மையப்படுத்தியே மக்களவைத் தேர்தல் நடைபெறும்- ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், ராகுல் காந்தி தலைவரான பிறகு காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டடுள்ள மாற்றம் மற்றும் 2019 மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் மூலோபாயம் குறித்து Zee News Digital-ன் கருத்து எடிட்டர் பியுஷ் பாபெல்லினுடன் நீண்ட பேச்சு வார்த்தை நடத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், ராகுல் காந்தி தலைவரான பிறகு காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டடுள்ள மாற்றம் மற்றும் 2019 மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் மூலோபாயம் குறித்து Zee News Digital-ன் கருத்து எடிட்டர் பியுஷ் பாபெல்லினுடன் நீண்ட பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது பேசிய ரமேஷ், நரேந்திர மோடியை அதிகாரத்திலிருந்து அகற்று எவ்வித தியாகத்தையும் காங்கிரஸ் கட்சி செய்ய தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நேர்காணலில் இருந்து சில கேள்வி பதில்கள் இதோ:-
கேள்வி: ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்று ஐந்து மாதங்களுக்கு ஆயின, இந்த நேரத்தில் காங்கிரஸில் சிறப்பு மாற்றங்கள் என்னென்ன?
பதில்: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்ற பிறகு, காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரும், இளைஞரும் கட்சியில் உரிய இடத்தைப் பெறுவார்கள் எனக் கூறி இருந்தார். ஆனால், பதவியேற்ற பின்னர் நியமனங்கள், செயலாளர்களிடமும் ஏனைய முக்கிய பதவிகளில் இளைஞர்களுக்கு அதிகமான இடங்கள் வழங்கப்படுகின்றன. இது காங்கிரசிற்கு வந்த மாற்றம் ஆகும், இந்த கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டது.
இரண்டாவது மாற்றம் நீங்கள் கர்நாடகா சட்டசபை தேர்தல்களின் முடிவுக்கு பிறகு பார்த்திருப்பீர்கள். இந்த முறை மணிப்பூர், கோவா மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற கட்சி தாமதம் படுத்தவில்லை. மேலும் எதிர்க்கட்சிகளின் தீர்மானத்திற்கு முன் காங்கிரஸ் காட்சி உயர் கட்ட முடிவு வழங்கியது. முன்பு போன்று முடிவு எடுத்திருந்தால் கர்நாடகா காங்கிரஸ் கையில் இருந்து வெளியேறியிருக்கும். கர்நாடகா மாநிலம் எங்களிடம் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாக இருந்தது. இல்லையெனில், காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் முடங்கி இருந்துருக்கும். காங்கிரஸ் விரைவாக முடிவெடுத்ததுடன் தாராளமான மனப்பான்மையும் காட்டியது. ஒரு சிறிய கட்சியாக இருந்தாலும், ஜே.டி.எஸ் நிபந்தனையின்றி முதலமைச்சரின் பதவியைப் பெற்றது. பின்னர் நிதி அமைச்சர் பதவியும் தந்தது. இது போன்ற விரைவான முடிவு என்னை போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு இது காங்கிரஸ் காட்சி தான என்று நம்ம முடிய வில்லை.
கேள்வி: உங்களின் கருத்து படி சோனியா காந்தி தலைமையில் அனைத்து முடிவுகளும் தாமதத்துடன் எடுக்கப்பட்டது ராகுல் காந்தி தலைமையில் மாற்றிவிட்டார்?
பதில்: இந்த ஒப்பீடு சரியானது அல்ல. அப்படி பார்த்தால், சோனியாவின் வயதிற்கும் ராகுல் வயதுக்கும் 25 வயது வித்தியாசம் உள்ளது. ஜெனரேசன் மாற்றம் உள்ளது. இந்த வேகமாக முடிவுகளுக்கு தலைமுறையின் மாற்றம் காணப்படுகிறது.
கேள்வி: நீங்கள் கூட்டணி பற்றி பேசுகிறீர்கள், உங்களுக்கு எங்கெங்கு கூட்டணி சாத்தியம் தெரிகிறது?
பதில்: UPயிலிருந்து தொடங்கினால், முதலில் கோரக்பூர்-புல்பூர் இப்போது கேரானா ஆகிய மூன்று இடங்களிலும் கூட்டணியின் தாக்கத்தை காட்டுகிறது. UPயில் SP, BSP, RLD மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒன்றாக தேர்தலில் போட்டியிடும். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜே.எம்.எம் மற்றும் ஜே.வி.எம் கட்சிகளுடன் நாங்கள் ஒன்று சென்று போட்டியிடுவோம். கேரளாவில் ஏற்கனவே கூட்டணி உள்ளது. கர்நாடகாவில் ஜே.டி.எஸ்.யுடன் கூட்டணி செய்துவிட்டோம். தெலுங்கானாவிலும் கூட்டணி ஏற்படுத்துவோம். மேற்கு வங்கத்தில் கூட்டணி இருக்கும். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் SP உடன் கூட்டணி அமைக்க நம்பிக்கை இருக்கிறது. இவை தேர்தலுக்கு முன் உள்ள கூட்டணி. தேர்தலுக்குப் பின்னரும் இந்த கூட்டணி இருக்கும்.
கேள்வி: மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் பீகாரில் ஜே.டி.யு உடன் கூட்டணி சாத்தியமா?
பதில்: தேர்தல் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. சிவசேனாவுடன் நட்பு கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. ஜே.டி.யு பொறுத்தவரை, இரண்டு மணிநேரங்களில் மனதை மாற்றும் நபர், அவர்களுடன் கூட்டணி எவ்வாறு அமைப்பது. நிதீஷ் ஒரு நல்ல நண்பர், அவருடன் அடிகடி நான் பேசுவதுண்டு. ஆனால் அவர்கள் நம்ப முடியாது. JDUக்கு பாஜக உடன் போக வேண்டியிருந்தது என்றால், அவர்கள் தேர்தலின் போதே பொதுமக்களிடம் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.
கேள்வி: கடைசி கேள்வி, நீங்கள் மோடி அரசாங்கத்தின் நான்கு ஆண்டுகளை எப்படி விவரிப்பீர்க்கள்?
பதில்: பதவிக்கு வருமுன் Minimum Government with Maximum Governance ஆளுமையை அதிகப்படுத்தி, அரசாங்கம் என்பதை குறைந்த அளவு நடத்துவோம் என்று இலட்சிய முழக்கம் செய்தது மோடி அரசு. ஆனால் அதற்கான உண்மையான அர்த்தமோ குறைந்த உண்மை, மார்கெட்டிங் அதிகம்.