காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய காவிரி உரிமை மீட்பு பயணத்தில் இன்று வல்லம்படுகை பகுதியில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக்குறித்து அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது:-


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய காவிரி உரிமை மீட்பு பயணத்தில் இன்று (12-04- 2018) வல்லம்படுகை பகுதியில் பெருந்திரளாக திரண்டிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றினேன். அதில்,காவிரி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து நமது உரிமைகளை மீட்க வேண்டுமென்றும், உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் அளித்துள்ள உறுதியான தீர்ப்பை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டு, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் இப்பயணத்திற்கு மக்கள் அளித்து வரும் பேராதரவை எடுத்துரைத்தேன்.


மோடி வருகையால் தமிழகம் முழுக்க கருப்பாக மாறவேண்டும்: ஸ்டாலின்!


அதேநேரத்தில், தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்கிற வகையில் கருப்புடையணிந்தும், அனைவரின் இல்லங்களிலும் கருப்புக் கொடியினை பறக்க விட்டும் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கு என்னுடைய நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டேன்.


#GoBackModi : உலக அளவில் டிரெண்டான மோடி!!


அதேபோல், நாம் கருப்புக் கொடி காட்டுகிறோம் என்றால், அதை எதிர்க்கக்கூடிய ஆற்றல் கூட பிரதமருக்கு இல்லாமல் விமானத்தில் வந்து விழா நடக்கின்ற இடத்திற்கும் ஆகாயத்திலேயே பறந்து கொண்டிருக்கிறார். ஆனால், தேர்தல் வருகின்ற நேரத்தில் அவர் கீழே இறங்கி வந்துதான் தீரவேண்டும். தேர்தலின்போதும் இப்படி ஆகாயத்திலேயே பறந்து தான் ஓட்டு கேட்பாரா என கேள்வியெழுப்பினேன்.


கருப்பு கொடி!! கருப்பு சட்டையுடன் இருக்கும் கருணாநிதி புகைப்படம்!!


ஆகவே, ஆகாயத்திலே பறந்து கொண்டிருக்கும் பிரதமர் அவர்களே.. கீழே கொஞ்சம் பாருங்கள், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாய் கருப்புக் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. இது எம் உரிமை! இனியாவது விழித்துக் கொள்ளுங்கள், இல்லையென்றால் நீங்கள் விழித்துக் கொள்ளும் வரையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கின்ற வரையிலும் எங்களின் போராட்டம் ஓயாது என்றேன்.


இவ்வாறு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.