செக்ஸ் முதல் டேட்டிங் வரை; உலகின் கடுமையான சட்டங்களைக் கொண்ட 10 நாடுகள்!

Tue, 08 Sep 2020-1:36 pm,

எக்வடோரியல் கிய்னேவில் வாழும் மக்கள் வாசிப்பு மற்றும் எழுதுதல் மீது நாட்டம் இல்லாதவர்களாக உள்ளனர். இந்த நாட்டில் செய்திதாள்கள் மற்றும் புத்தக கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகமாக இந்த நாட்டிற்கு வருவதில்லை. இந்த நாட்டின் இரண்டாவது பிரதமரான தியோடோரோ ஒபியாங் நுயெமா எம்பசோகோ என்பவர் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்தினார். 

சவுதி அரேபியா இஸ்லாம் மதத்தை அடிப்படையாக கொண்ட நாடாகும். எனவே நாட்டின் சட்டங்களிலும் அதிகமாக இஸ்லாத்தின் விதிமுறைகள் இருப்பதை காணலாம். சவுதியில் பெண்களுக்கான சட்டங்கள் கடுமையானதாக உள்ளன. பெண்கள் வெளியே செல்லும் போது சாதரண உடைகளை அணிந்து செல்ல சட்ட பூர்வமாகவே அவர்களுக்கு அனுமதி கிடையாது.

ஒரு ஆண் பெண்ணின் உறவினராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஒரு ஆணின் முன் அவர்கள் சாதரண ஆடைகளை அணிந்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். ஊடகங்கள் அவர்களை உன்னிப்பாக கண்காணிக்கின்றன. 

ஈரான் அரசாங்கமானது ஷரியா என்கிற சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இங்கு அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரமோ நடவடிக்கைகளோ செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. ஈரானிய நிர்வாகத்தை குறித்து மோசமாக பேசும் எவரும் அங்கு சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.

கூகுள், யூட்யூப், மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளன. இஸ்லாத்தின் பரிந்துரை இல்லாமல் அங்கு ஒரு ஆணால் முடி வெட்டிக்கொள்ள முடியாது. பெண்களும் குறிப்பிட்ட ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். அவர்கள் ஹிஜாப் என்ற ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்.

தற்சமயம் வட கொரியா மட்டுமே கம்யூனிசத்தை பின்பற்றி வருகிறது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை தவிர மற்ற நாடுகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு தனி ஆட்களை அனுமதிக்கின்றனர். அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அரசாங்கத்திற்கு எதிராக பேசுவது மற்றும் அரசாங்க விதிகளை மீறுவது ஆகியவற்றில் இருந்து தடுக்கவே இந்த ஏற்பாடு.

1993 இல் ஆப்பிரிக்காவிற்கு மேலே அமைந்துள்ள எரித்திரியா என்னும் பகுதியை இசயாஸ் அஃபெவெர்கி என்பவர் ஆட்சி செய்து வந்தார். அப்போது இருந்த அரசும் ஜனாதிபதியும் செய்தி மற்றும் அதை எழுதும் எழுத்தாளர்கள் மீது முழு கட்டுப்பாட்டை விதித்தனர்.

ஒரு செய்தி ஒளிபரப்பப்படுவதற்கு அல்லது வெளியிடப்படுவதற்கு முன்பு அதை ஜனாதிபதி அலுவலகம் அங்கீகரிக்க வேண்டும். மதம் சார்ந்த கட்டுப்பாடுகளும் இங்கே உள்ளது. பொது வழிப்பாடு செய்ய மக்களுக்கு அனுமதி இல்லை. அவர்கள் தங்கள் சொந்த தெய்வங்களை வணங்குவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட பிரிவில் முதலில் உறுப்பினராக வேண்டும்.

அரசுக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையே ஏற்படும் மோதலால் வன்முறை அதிகரித்து வரும் ஒரு நாடு சிரியா. இதனால் இண்டர்நெட்,மொபைல் மற்றும் லேண்ட்லைன் போன்றவை அங்கே குறைவாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு செய்தி நிரூபர்கள் இந்த நாட்டிற்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் அனைத்து செய்திகளும் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகின்றன. 

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மற்றும் கியூப சுருட்டுகளின் தாயகமான தேசம்தான் கியூபா. உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாக கியூபா உள்ளது. கியூபா ஒரு கம்யூனிச தேசமாகும். ஆனால் அங்கு செல்பவர்கள் கியூப தேசத்திற்கு எதிராக பேசினால் அது அவர்களுக்கு சிக்கலை உருவாக்கும். அங்கு இண்டர்நெட் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன. அரசாங்க விரோத கருத்துக்களை வெளியிடும் எழுத்தாளர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். ரெக்கேட்டன் என்ற இசை ஒளிபரப்ப அனுமதி கிடையாது.

ஜப்பானிய அரசு எவ்வாறு வணிகத்தை செய்கிறது என்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாடாகும். இங்கு பள்ளி, அலுவலகம், பணியிடம் மற்றும் வீடு என அனைத்து படிநிலைகளிலும் அரசு தனது அதிகாரத்தை கொண்டுள்ளது. நிறுவனம் சார்ந்த கட்டமைப்புகளில் ஜப்பான் கடுமையான கொள்கைகளை கொண்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முதல் சாதரண ஊழியர் வரை அனைவரும் சிறப்பாக செயல்பட்டு சிறந்த ஊழியராக இருப்பது அவசியம். 

சிங்கப்பூர் பார்க்க சிறிய நாடாக இருந்தாலும் மற்ற நாடுகளை காட்டிலும் உயர்ந்த இடத்தில் உள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த நாட்டிற்கு அதிகமாக வருகிறார்கள். மற்ற நாடுகளை போல் அல்லாமல் சில தவறான நடவடிக்கைகளுக்கு மட்டும் இவர்கள் அபராதம் விதிக்கின்றனர். பொது இடங்களில் எச்சில் துப்புவதும் புகை பிடிப்பதும் சிங்கப்பூரில் குற்றமாகும். அங்கு சில பொருத்தமற்ற உடைகளை அணிவதற்கும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

சீனா பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக உள்ளது. அது தனது அண்டை நாடுகளுடன் நேர்மறையான பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா ஒரு கம்யூனிச தேசம் ஆகும். இதனால் அரசாங்கத்திற்கு விரோதமான எந்த ஒரு பிரச்சாரமும் உடனே கண்டறியப்பட்டு அதை செய்தவர்கள் தண்டனைக்குள்ளாகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link