பித்ரு பக்ஷ காரியங்களால் முன்னோர் திருப்தி அடைந்தார்களா? உண்மை சொல்லும் உயிரினங்கள்!
இந்த ஆண்டு பித்ரு பக்ஷம் செப்டம்பர் 17 ஆம் தேதி செவ்வாய் கிழமை தொடங்குகிறது. பித்ரு பக்ஷத்தின் போது செய்யப்படும் தர்ப்பணம், ஷ்ராத்தம் மற்றும் பிண்ட தானம் போன்றவற்றால் நமது முன்னோர்களுக்கு திருப்தியா இல்லை அதிருப்தியா என்பதை தெரிந்துக் கொள்ள சில வழிகள் உள்ளன
நமது மூதாதையினரின் ஆன்மா, பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வரும் வேளையில் அவர்களது பசி தாகத்தை தணிப்பது நம் கடமை
பித்ரு லோகத்திற்கு சென்ற ஆன்மாக்களுக்கு ஆண்டுதோறும் மஹாளய பித்ரு பட்ச காலத்தில் நாம் நமது கடமையை செய்ய வேண்டும். அப்போது நாம் வைக்கும் உணவை காகம் உண்டால், நம்மை முன்னோர்கள் ஆசிர்வதிப்பதாக பொருள்
முன்னோர்களை சாந்தப்படுத்துவதற்கு நாம் என்ன செய்தாலும், அது அவர்களுக்கு திருப்தி அளித்ததா என்பதைத் தெரிந்துக் கொள்ளவும் வழி உண்டு. அதனைத் தெரிந்துக் கொள்வோம்
பித்ரு பக்ஷத்தில் பசுவுக்கு உணவு கொடுக்கும் போது, அது உணவை உண்டால் நல்லது, முன்னோர்களின் ஆசீர்வாதம் உண்டு என்பது நம்பிக்கை
சிரார்த்த சடங்குகள் செய்யும்போது, எறும்பு உணவை உண்டால், முன்னோர்களுக்கு திருப்தி என்பது காலம்காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.திருப்தியடைந்த முன்னோர், தங்களது சந்ததியினர், செழிப்பு, முன்னேற்றம் மற்றும் நிம்மதியுடன் வாழ ஆசீர்வதிப்பார்கள்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது