உலகின் இந்த 5 நகரங்களில் மரணத்திற்கே தடை! காரணம் இதுதான்!

Fri, 10 Dec 2021-1:50 pm,

ஜப்பானிய தீவு இட்சுகுஷிமா புனிதமான இடமாக கருதப்படுகிறது. 1868 வரை இங்கு இறக்கவோ பிறக்கவோ அனுமதி கொடுக்கப்படவில்லை. இட்சுகுஷிமா தீவில் இன்றுவரை கல்லறையோ அல்லது மருத்துவமனையோ கிடையாது

லான்சரோனில் உள்ள உள்ளூர் கல்லறையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், கிரனாடா மாகாண கிராமத்தின் மேயர் 1999 இல் மரணத்தை தடை செய்தார். இந்த நடவடிக்கை ஓரளவு கேலிக்கூத்தாகவும், ஓரளவு அரசியல் நடவடிக்கையாகவும் உண்மையின் கவனத்தை ஈர்க்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த தடை உண்மையானது. மற்றும் 4,000 பேர் மட்டுமே வசிக்கும் இந்த ஊரில் புதிய கல்லறை கண்டுபிடிக்கும் வரை உயிர்வாழ வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தினார்கள்.

2007 இல், Cugnaux மேயர் ஒரு புதிய கல்லறையைத் திறக்க அனுமதி பெறத் தவறிவிட்டார். எனவே, இங்கு மரணத்தைத் தடை செய்தார். நகரத்தில் சுமார் 17,000 மக்கள் வசிக்கின்றனர். இருப்பினும், மரணிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, உள்ளூர் மயானத்தை விரிவுபடுத்த அனுமதி வழங்கப்பட்டது.

நிலக்கரி சுரங்கத்திற்கு பெயர் பெற்ற நார்வேயில் உள்ள ஒரு சிறிய நகரம் லாங்கியர்பைன். ஆர்க்டிக் வட்டத்திற்கு மிக அருகில் இருப்பதால், வானிலை பொதுவாக குளிர்ச்சியான இருக்கிறது. எனவே, இங்கு இறந்த உடல்கள் சிதைவது மிகவும் மெதுவாக இருப்பதால்,  தொற்று நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, Longyearbyen நகரில் ஒருவர் இறந்தால், அவரை புதைக்கப்பது சட்டப்படி குற்றம். எனவே, இறக்கும் நிலையில் இருப்பவர்கள்,  நார்வேயின் பிற நகரங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

2000 ஆம் ஆண்டில், 'சுற்றுச்சூழல் கவலைகள்' காரணமாக ஒரு புதிய கல்லறைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்குள்ள மேயர் மரணத் தடையை விதிக்க வேண்டியிருந்தது. 2000 ஆம் ஆண்டில், இயற்றப்பட்ட சட்டத்தின்படி, மக்கள் நகரத்திற்குள் இறக்க தடை விதிக்கப்பட்டது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link