கார் லோன் வாங்கும்போது இந்த 5 விஷயங்களை மறந்தும் செய்துவிடாதீர்கள்! தினமும் வருந்துவீர்கள்

Thu, 14 Mar 2024-1:43 pm,

Car Loan Tips: கார் கடன் வாங்கும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் அதற்காக தினமும் வருந்துவீர்கள். அத்துடன் கடன் தொகை அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். பணம் விரயம், உங்கள் நேரமும் விரயமாகும். இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் முன்னெச்சரிக்கையாக இருக்க எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

1. வட்டி விகிதம்: 

கார் கடன் வாங்கும்போது, உங்களுக்கான லோன் வட்டி விகிதம் குறித்து அறிந்து கொள்வது அவசியம். குறைந்த வட்டியுள்ள லோன் தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம். ஒருமுறைக்கு இருமுறை எந்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் எல்லாம் கார் லோன் கொடுக்கின்றன, அவற்றின் வட்டி விகிதங்கள் என்ன? என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு எந்த வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் கார் லோன் வாங்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள். 

2. முன்பணம்:

முன்பணம் அதிகமாக இருந்தால், கடன் தொகை குறைவாகவும், உங்கள் மாதாந்திர EMI குறைவாகவும் இருக்கும். எனவே, உங்களிடம் போதுமான பணம் இருந்தால், அதனைக் கொண்டு அதிக முன்பணம் செலுத்துவது நல்லது.

3. கடன் காலம்:

கடன் காலம் குறைவாக இருந்தால், மாதாந்திர EMI அதிகமாக இருக்கும். எனவே, உங்கள் நிதி நிலைமையை மதிப்பிட்டு, நீங்கள் எளிதாகத் திருப்பிச் செலுத்தக்கூடிய EMI கடன் காலத்தைத் தேர்வுசெய்யவும்.

4. Addon சேவை:

சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கார் கடனுடன் கூடுதல் சேவைகளை வழங்குகின்றன. அதாவது சாலையோர உதவி போன்றவற்றை கொடுக்கின்றன. இது ஒருவருக்கு பயனுள்ளது என்பதால் நீங்கள் இந்த சேவைகள் குறித்தும் அதற்கான கட்டணம் குறித்தும் அறிந்து கொள்ளுங்கள். மலிவாக எந்த நிறுவனம் இந்த சேவை கொடுக்கிறதோ, அதை தேர்வு செய்யவும்.

5. மற்ற கட்டணங்கள்:

கார் கடனுடன் தொடர்புடைய செயலாக்கக் கட்டணம், முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் போன்ற வேறு சில கட்டணங்களும் இருக்கலாம். இந்தக் கட்டணங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் கடனுக்கான மொத்தச் செலவில் அவற்றைச் சேர்க்கவும். இந்த செயலாக்க கட்டணம் மிக குறைவாக இருப்பவர்களிடன் கடன் வாங்குவதும், குறைந்த வட்டியில் கடனை தேர்வு செய்வதும் புத்திசாலித்தனம் என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link