விமான டிக்கெட்களை குறைந்த விலையில் பெறுவது எப்படி?
1. குக்கீகளை அழி:
அடிக்கடி, அதே விமானத்தை மீண்டும் பார்க்கும்போது, டிக்கெட் விலை திடீரென அதிகரித்திருப்பதை நீங்கள் கவனிக்கலாம். டிஜிட்டல் டிராக்கர்களான குக்கீகள் உங்கள் முந்தைய தேடல் தகவலைச் சேமிப்பதால் இது நிகழ்கிறது. அதனால், incognito window -ஐ ஓபன் செய்து விமான டிக்கெட்டுகளை தேடுங்கள். ஒவ்வொரு முறை தேடி முடித்த பிறகும் பிரவுசரில் இருக்கும் குக்கீகளை அழித்துவிடுங்கள். இதன் மூலம் குறைவான விமான டிக்கெட் விலை விவரங்களை சீக்கிரம் பெற முடியும்.
2. பல தளங்களை ஒப்பிடுக:
எப்போது விமான டிக்கெட்டுகளை தேடினாலும், ஒரே ஒரு தளத்தில் பார்த்துவிட்டு அந்த விமான டிக்கெட்டுகளை புக் செய்ய வேண்டாம். பல தளங்களில் விமான டிக்கெட்டுகளை ஒப்பீடு செய்யுங்கள். அதில் குறைவான விமான டிக்கெட்டுகளை தேர்வு செய்யவும்.
3. குறிப்பிட்ட தேதிகள் வேண்டாம்:
விமான டிக்கெட் குறைவான விலையில் வேண்டும் என்றால், குறிப்பிட்ட தேதியில் வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்க வேண்டும். நீங்கள் விரும்பும் தேதிக்கு முன்னும் பின்னும் இருக்கும் விமான டிக்கெட் விலையை பார்க்கவும். அதில் குறைவான விலையில் விமான டிக்கெட் இருக்கும் தேதியை உங்கள் பயணத்துக்கான தேதியாக மாற்றிக் கொள்ளுங்கள்.
4. தள்ளுபடிகளைப் பயன்படுத்தவும்:
பல விமான நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் டிராவல் ஏஜென்சிகள் வங்கிகளின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது, குறிப்பாக பிரீமியம் கார்டுகளைப் பயன்படுத்தும் போது விமான டிக்கெட் ஆஃபர்களை வழங்குகின்றன. பிரீமியம் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தும்போது தள்ளுபடியுடன் கூடிய விமான டிக்கெட்டுகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ரிவார்டுகளையும் விமான டிக்கெட் தொகைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் இவற்றின் உதவியுடன் விமான டிக்கெட்டுகளின் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.
5. முன்பதிவு செய்யுங்கள்:
உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவது குறைந்த விலை மற்றும் விமான டிக்கெட்டுகளில் சிறந்த சலுகைகளைப் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், விமான டிக்கெட் விலை எப்போது குறையும் என்பதை அறிய டிக்கெட் டிராக்கர்களைப் பயன்படுத்துவது ஒரு நல்ல வழிமுறை. இவை எந்த தேதியில் எந்த விமானங்கள் குறைவான டிக்கெட்டுகளை கொடுக்கின்றன என்பதை முன்கூட்டியே காட்டும்.
6. விடுமுறைகள் திட்டமிடல்:
மக்கள் அதிகம் விமான போக்குவரத்தை பயன்படுத்தும் நேரங்களில் உங்களின் பயணங்களை திட்டமிட வேண்டாம். உதாரணமாக, பண்டிகை அல்லது அரசு விடுமுறை தினங்களில் இயல்பாகவே டிக்கெட் விலைகள் அதிகமாக இருக்கும். அதனால், டிமாண்ட் இல்லாத நேரங்களில் டிக்கெட் விலை குறைவாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.