நைட் ஷிஃப்ட் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் 7 பிரச்சனைகள்!!
இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு சர்காடியன் ரிதம் எதிர்திசையில் சுற்றுகிறது. இதனால், தூக்கமின்மை, குறைவான தூக்கம், படுத்தவுடன் உறங்குவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.
இரவில் வேலை செய்பவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், இரைப்பை குடல் பிரச்சினைகள் ஆகியவை வர அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இரவில் வேலை பார்ப்பவர்களுக்கு பதற்றம், மன அழுத்தம், மனக்குழப்பம் ஆகியவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாம்.
குறைவான தூக்கம் இருப்பதால், இரவில் வேலை பார்ப்பவர்களின் நோயெதிப்பு திறன் குறையலாம்.
இரவு ஷிஃப்ட் பார்ப்பவர்களுக்கு நினைவுத்திறன் இழப்பது, முடிவெடுக்கும் திறன் குறைவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
சரியான தூக்கம் இல்லாததால், வேலையில் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் அதிக தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதாம்.
இரவு நேரத்தில் வேலை பார்ப்பது, குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். குறிப்பாக, திருமணமானவர்கள் வாழ்வில் இது பெரும் மாறுதலை உண்டாக்கும். ஒரு வித தனிமை உணர்வையும் அளிக்குமாம்.