நீங்கள் காதலில் விழுந்து விட்டீர்களா? ‘இந்த’ 8 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!!
இரண்டு பேரும் எங்கு இருந்தாலும், ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொண்டே இருப்பீர்கள். உங்கள் வாழ்வில் எந்த பெரிய விஷயம் நடந்தாலும், சிறிய விஷயம் நடந்தாலும் முதலில் அவரிடம் சொல்ல வேண்டும் என உங்களுக்கு தோன்றும்.
பாசிடிவான உணர்ச்சி:
அந்த நபருடன் சில மணி நேரங்கள் பேசிய பிறகு, உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
அவரைப்பற்றியும் அவரது வாழ்க்கை பற்றியும் சிறு சிறு தகவல்கள் கூட உங்களுக்கு நினைவில் இருக்கும். நீங்கள் அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதற்கான அறிகுறி இது.
அவரைபற்றி நீங்கள் நினைக்கும் போது, உங்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணங்கள் இருக்கும். அவருடன் இத்தனை வருடங்கள் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்ப்பீர்கள்.
இதற்கு முன்னர் நீங்கள் இருந்த காதல் உறவுகளை விட இது வித்தியாசமான உறவாக இருக்கும். முன்னர் செய்த தவறை, இந்த உறவில் உங்களுக்கு செய்ய தோன்றாது.
புரிந்து கொள்ளுதல்:
நீங்கள் காதலிப்பதாக நினைக்கும் நபருக்கும் உங்களுக்கும் புரிதலும், புரிந்துணரும் திறனும் அதிகமாக இருக்கும். அவர் மனம் புண்பட்டால் உங்கள் மனம் தாளாது. அவருக்கு ஒரு விஷயம் மகிழ்ச்சியை கொடுத்தால், உங்களுக்கும் அந்த விஷயம் மகிழ்ச்சியை தரும்.
உங்களுக்கு அவர் மீது இருக்கும் ஈர்ப்பு, வேறு யார் மீதும் இருக்காது. பிற ஆண்களை அல்லது பெண்களை பார்க்கும் போது அவர் உங்கள் கண்களுக்கு அழகாக தோன்றினாலும், அவர் மீது உங்களுக்கு ஈர்ப்பு ஏற்படாது.
கவனம்:
உங்களுக்கு பிடித்த நபர் உங்களிடம் பேசும் போது, அல்லது அவர் உங்கள் அருகில் இருக்கும் போது உங்களது கவனம் முழுவதும் அவர் மீதுதான் இருக்கும்.