Mahatma Gandhi: ஆறாவது முயற்சியில் கொள்ளப்பட்ட தேசத்தந்தை காந்தியின் 73வது நினைவு நாள்
ஜூன் 5, 1934 அன்று, புனேவில் காந்திஜி மக்களிடையே உரையாற்றச் சென்றார். காந்தி பயணம் செய்ததாக நம்பப்படும் கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது.
ஜூலை 1944 இல், காந்திஜி பஞ்சங்னியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, மக்கள் குழு ஒன்று எதிர்ப்பு தெரிவிக்க வந்தது. காந்திஜி அந்தக் குழுவின் தலைவரான கோட்சேவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார், ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். பிரார்தனை செய்துக் கொண்டிருந்த காந்தியை குத்த முயன்ற முயற்சி தடுக்கப்பட்டது.
செப்டம்பர் 1944 இல், காந்திஜியுடன் பேச்சுவார்த்தை நடத்த பம்பாய்க்கு வந்த நாதுராம் கோட்சே, காந்திஜியின் ஆசிரமவாசிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதற்கு காரணம் அவரிடம் கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜூன் 1946 இல் புனேவுக்கு சிறப்பு ரயிலில் சென்று கொண்டிருந்த காந்திஜி ரயில் விபத்தில் சிக்கினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதுவும் காந்தியை கொல்வதற்கான சதி என்றே நம்பப்படுகிறது.
ஜனவரி 20, 1948 அன்று, பிர்லா பவனில் நடந்த கலந்துரையாடலின் போது காந்திஜி மீது மற்றொரு முறை கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மதன்லால் பஹ்வா, நதுராம் கோட்சே, நாராயண ஆப்தே, விஷ்ணு கர்கரே, திகம்பர் பேட்ஜ், கோபால் கோட்சே மற்றும் ஷங்கர் கிஸ்தையா ஆகியோர் கொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
ஜனவரி 30 அன்று, பிர்லா ஹவுஸில், அண்ணல் காந்தியை கோட்ஸே மூன்று முறை துப்பாக்கியால் சுட்டார். இந்தியப் பிரிவினைக்கு காரணம் காந்திஜிதான் என்று கோட்சே குற்றம் சாட்டினார்.
‘எனது வாழ்க்கையே எனது செய்தி’ என்பதே காந்தியின் மிகச் சிறந்த பொன்மொழி. அதை மெய்ப்பிப்பதுபோல் யாராலும் செய்து காட்ட முடியாத அளவுக்கு உயர்ந்த தியாக வாழ்க்கையை வாழ்ந்து உதாரண புருஷராக உயர்ந்தவர் அண்ணல் காந்தி.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார்.
இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை என்ற ஆழமான கொள்கை பிடிப்பை கொண்டிருந்தார் தேசத்தந்தை....
லண்டனில் கல்வி பயின்ற காந்தி, தென்னாப்பிரிக்காவிலும் வ்சித்தார். அங்கு ஒடுக்குமுறைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களே இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட அவருக்கு அச்சாணி அமைத்துக் கொடுத்தது.