மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் தீபாவளி பரிசு: அகவிலைப்படி உயர்வு, டிஏ அரியர்... விரைவில் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நல்ல செய்தி காத்திருக்கின்றது. அவர்களுக்கு மிக விரைவில் குட் நியூஸ் கிடைக்கவுள்ளது. இதன் பின்னர் அவர்களது மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். இதைப் பற்றி விரிவாக காணலாம்.
7வது ஊதியக் குழுவின் கீழ் ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில், சில மாநிலங்கள் வெவ்வேறு காலகட்டங்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. மத்திய அரசும் டிஏ ஹைக் அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சம்பள உயர்வு: ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) அதிகரிக்கப்படுகின்றன. இது சம்பள உயர்வுக்கு வழிவகுக்கின்றது. ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வு பொதுவாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்படுகின்றது.
தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி திருத்தம் தீர்மானிக்கப்படுகின்றது. ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையிலும், ஜூலை மாத டிஏ உயர்வு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும் செய்யப்படுகின்றது.
ஜவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு 3%-4% இருக்கும் என நம்பப்படுகின்றது. டிஏ உயர்வு 3% இருந்தால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் 54% ஆகவும், இது 4% அதிகரித்தால். டிஏ மற்றும் டிஆர் 54% ஆகவும் அதிகரிக்கும்.
ஊதிய உயர்வு கணக்கீடு: சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என வைத்துக்கொள்ளலாம். ஜூலை மாதம் அகவிலைப்படி 3% அதிகரித்தால், அவரது மொத்த சம்பளத்தில் ரூ 540 அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு மூலம் ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.6,480 கூடுதல் வருமானம் கிடைக்கும். ரூ 56,900 அடிப்படை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு 3% டிஏ உயர்வு (DA Hike) மூலம் மாத சம்பளம் ரூ.1,707, ஆண்டு சம்பளம் ரூ.20,484 என்ற அளவில் உயரும்.
ஊதிய உயர்வு கணக்கீடு: மாதச் சம்பளம் ரூ.50,000 உள்ள ஊழியர்களுக்கான கணக்கீட்டை காணலாம். அகவிலைப்படி 3% அதிகரித்தால், அவர்களுக்கு மாதா மாதம் சம்பளத்தில் ரூ.1,500 கூடுதலாக வரும். ஆண்டுக்கு இந்த உயர்வு ரூ.18,000 ஆக இருக்கும். இந்த தொகை பல்வேறு லெவல் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.
செப்டம்பர் அல்லது அக்டோபரில் டிஏ ஹைக் அறிவிக்கப்பட்டால். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அக்டோபர் 2024 இன் சம்பளம்/ஓய்வூதியத்தில் இந்த உயர்வு கிடைக்கும். இதனுடன் ஜூலை முதலான டிஏ அரியர் தொகையும் கிடைக்கும். இந்த வகையில் அக்டோபர் மாத ஊதியத்தில் ஊழியர்கள் மிகப்பெரிய ஏற்றத்தைக் காண்பார்கள்.
ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியத்திலும் பெரிய அளவில் ஏற்றம் இருக்கும். ஒரு ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.25,000 எனில், அவருக்கு தற்போது 50 சதவீதத்தின்படி ரூ.12,500 அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படி 53% ஆக அதிகரித்தால், இந்த தொகை ரூ.13,250 ஆக உயரும்.
முன்னதாக, ஜனவரி -2024 -இல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியத்தாரர்களின் அகவிலை நிவாரணம் 50% ஆக உயர்ந்தது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி அளிக்கபடுகின்றது. இது ஊழியர்களின் ஊதிய கட்டமைப்பில் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கபடுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.