மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் ஜாக்பாட்: 54% டிஏ? காத்திருக்கும் அரசின் பரிசு
மத்தியில் பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசாங்கத்திடமிருந்து பல எதிர்பார்ப்புகள் மக்களுக்கு உள்ளன. குறிப்பாக நிலுவையில் உள்ள பல பணிகள் இனி விரைவாக முடிக்கப்படும் என நம்பிக்கை உள்ளது.
இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. தொழிலாளர் அமைச்சகம் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவை வெளியிட்டுள்ளது. இதில், அகில இந்திய சிபிஐ-ஐடபிள்யூ (CPI-IW) 0.5 புள்ளிகள் அதிகரித்து 139.4ஐ எட்டியுள்ளது. ஆகையால். ஜூலையில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பெரிய பரிசை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 2024 முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டுத் தரவைப் பொறுத்து ஆண்டுக்கு இரண்டு முறை (ஜனவரி/ஜூலை மாதங்களில்) அகவிலைப்படி மத்திய அரசால் திருத்தப்படுகிறது. ஜனவரியில் DA 4% உயர்த்தப்பட்டது. அதன் பிறகு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50%-ஐ எட்டியது.
அடுத்தது ஜூலை 2024 இல் டிஏ உயர்வு (DA Hike) இருக்கும். இது ஜனவரி முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவைப் பொறுத்து இருக்கும். ஏப்ரல் வரை இதன் மதிப்பெண் 139.4 ஐ எட்டியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து டிஏ மதிப்பெண் 51ஐ நெருங்கியுள்ளது.
மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. இவையும் வந்தவுடன்தான் ஜூலை மாதத்தில் டிஏ (DA) எவ்வளவு அதிகரிக்கும் என்பவார தெளிவாகும். ஜூன் மாதத்திற்குள் DA மதிப்பெண் 53ஐத் தாண்டினால், 3 முதல் 4% வரை கண்டிப்பாக அகவிலைப்படி அதிகரிக்கும். அதாவது மொத்த அகவிலைப்படி 53% அல்லது 54% ஆக உயர்கும். இதன் மூலம் ரூ.10,000 வரையிலான சம்பள உயர்வு இருக்கும்.
அகவிலைப்படி54% ஆக உயர்ந்தால், ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளில் பெரிய அதிகரிப்பு இருக்கும். உதாரணமாக, அடிப்படை சம்பளம் ரூ.50000 எனில், அதில் 4% அதாவது 2000 டிஏ அதிகரிக்கும், அதாவது ஜூலை மாத சம்பளத்தில் அகவிலைப்படியாக ரூ.2000 உயர்வு கிடைக்கும்.
சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் சம்பளத்தில் 3% அதிகரிப்பு செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கையை அடிப்படையாகக் கருதினால், ஜூலையிலும் 3% சம்பள உயர்வு இருக்கும். ஒருவரது சம்பளம் ரூ. 50000 ஆக இருந்தால், 3% அதிகரிப்பில் ரூ.1500 கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் ரூ.1,500 மற்றும் அகவிலைப்படி அதிகரிப்பு என மொத்தம் ரூ.3,500 அதிகரிக்கும்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் மற்றும் நன்னடத்தை விதிகள் முடிவடைந்த பிறகு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணை அலுவலகமான தொழிலாளர் பணியகம், பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் 2024 மாதங்களுக்கான குறியீடுகளை புதுப்பித்துள்ளது. பிப்ரவரிக்கான CPI-IW 0.3 புள்ளிகள் அதிகரித்து 139.2 ஆக இருந்தது. மார்ச் மாதத்திற்கான அகில இந்திய CPI-IW 0.3 புள்ளிகள் குறைந்து 138.9 ஆக இருந்தது. ஏப்ரல் 2024க்கான அகில இந்திய CPI-IW 0.5 புள்ளிகள் அதிகரித்து 139.4 ஆக உள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.