அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் அதிரடி ஏற்றம்: 25% உயர்ந்தன 13 அலவன்சுகள்

Sat, 06 Jul 2024-10:59 am,

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனுக்கான ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாக, அரசாங்கம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது. 

மார்ச் மாதம் ஜனவரி 2024 -க்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 4% அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் டிஏ மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஆர் 50% ஆக அதிகரித்தது. இந்த ஏற்றம் ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வந்தது. இது தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் கணிசமான உயர்வை ஏற்படுத்துயது. 

அகவிலைப்படி 50% -ஐ எட்டியுள்ளதைத் தொடர்ந்து பல்வேறு கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். இதில் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) மற்றும் பிற அலவசுகளும் அடங்கும். ஜூலை 4, 2024 அன்று பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை (DoPT) இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் படி, ஊழியர்களின் பல கொடுப்பனவுகள் ஜனவரி 1, 2024 முதல் தற்போதுள்ள கட்டணங்களை விட 25% அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளது.

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, அகவிலைப்படி (Dearness Allowance) 50% -ஐ அடையும் போது, ​​பல கொடுப்பனவுகளின் விகிதங்கள் 25% உயரும். அதன் படி இப்போது பல கொடுப்பனவுகளில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கடினமான இருப்பிட அலவன்ஸ் (TLA), சிறப்பு இழப்பீடு (தொலைதூர இடம்) கொடுப்பனவு, சுந்தர்பன் கொடுப்பனவு மற்றும் பழங்குடிப் பகுதி கொடுப்பனவு போன்ற அலவன்சுகளை ஒருங்கிணைக்கிறது. R&H மேட்ரிக்ஸில் உள்ள பல்வேறு வகைகளின் அடிப்படையில், இந்த கொடுப்பனவுகளின் வரம்பு மாதம் ரூ.1000 முதல் ரூ. 5300 வரை வேறுபடும்.

இது ஏழாவது ஊதியக் குழுவின் (7 CPC) அமலாக்கத்தின் போது, ஜூலை 2017 இல் நிதி அமைச்சகத்தால் புதுப்பிக்கப்பட்டது. இந்த அலவன்ஸ் போக்குவரத்து தொடர்பான பல்வேறு செலவுகளை உள்ளடக்கியது.

மாற்றுத்திறனாளி பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தது முதல் இரண்டு வயது வரை குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு உதவித்தொகையாக மாதம் 3000 ரூபாய் வழங்கப்படுகின்றது. திருத்தப்பட்ட ஊதியக் கட்டமைப்பின் படி, அகவிலைப்படி 50% ஐ எட்டும்போதெல்லாம், இந்தத் தொகை 25% அதிகரிக்கும்.

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி, CEA -வில் பின்வரும் நன்மைகள் உள்ளன: CEA/2 மூத்த குழந்தைகளுக்கு விடுதி மானியம், விடுதி மானியம் மாதம் ரூ. 6750, ஊனமுற்ற குழந்தைகளுக்கான இரட்டை CEA, இது மாதா மாதம் ரூ. 4500 வழங்கப்படும், ஊனமுற்ற குழந்தைகளால் பள்ளிக்குச் செல்ல முடியாவிட்டால், அவர்களுக்கு வீட்டிலேயே சிறப்புக் கல்விக்கான தொகை, ஒவ்வொரு முறையும் டிஏ (DA) 50% -ஐ எட்டும்போது CEA விகிதத்தில் 25% உயர்வு.

அகவிலைப்படி அதிகரிப்பால் ஏற்றம் காணும் பிற கொடுப்பனவுகள்: ஹோட்டல் வசதி, நகரத்திற்குள் பயணிப்பதற்கான கட்டணம், உணவு கட்டணம் அல்லது தினசரி கொடுப்பனவு, குறிப்பிட்ட கட்டணங்கள் எதுவும் பரிந்துரைக்கப்படாத இடங்களில் தனிப்பட்ட வாகனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கான தொகை, இடமாற்றத்தின் போது சாலை வழியாக பயணிக்க ஏற்பட்ட செலவு, ஆடை அலவன்ஸ், ஸ்பிலிட் டியூட்டி அலவன்ஸ், டெபுடேஹன் அலவன்ஸ்

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link