மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் டிஏ ஹைக்: அறிவிப்பு எப்போது?
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்ததையடுத்து ஜூன் 10 ஆம் தேதி புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து புதிய அரசிடமிருந்து பல பெரிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் அரசாங்க ஊழியர்களுக்கான எதிர்பார்ப்புகளும் பல உள்ளன.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 50% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். ஜனவரி 2024 முதல் ஊழியர்களின் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2024 -இல் வந்தது.
இதையடுத்து சில நாட்களாகவே ஜூலை 1 முதல் அகவிலைப்படி எவளவு அதிகரிக்கும் என்ற கேள்வி மத்திய அரசு ஊழியர்களிடம் உள்ளது. இப்போது அகவிலைப்படி 50% ஆக உள்ளதால், அது பூஜ்ஜியம் ஆக்கப்படுமா அல்லது 50%-க்கு மேல் தொடருமா என்ற கேள்வி உள்ளது. இதை பற்றிய சரியான தெளிவு இன்னும் இல்லை.
எனினும் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 50% ஆனவுடன் அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என நிபிணர்கள் கூறுகிறார்கள். மேலும் அப்படியே பூஜ்ஜியம் ஆக்க வேண்டும் என்றாலும், 50%-ஐ தாண்டியவுடன்தான் அது செய்யப்படும் என்றும் ஒரு கருத்து உள்ளது. ஆகையால், அடுத்த திருத்தத்தில் அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படலாம்.
கடந்த 3 மாதங்களில் பல மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு டிஏ (DA) வை உயர்த்தியுள்ளன. இப்படிப்பட்ட நிலையில், மத்திய அரசிடமிருந்தும் நல்ல டிஏ உயர்வு (DA Hike) எதிர்பார்க்கபடுகின்றது. இந்த ஆண்டின் இரண்டாவது அதிகரிப்பு ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வரும். இந்த உயர்வு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும் என நம்பப்படுகின்றது.
அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படியை இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கின்றது. இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பிறகு ஜுலை முதல் டிஏ அரியர் தொகையும் கிடைக்கும்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி அளிக்கப்படுகின்றது. இது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு, அதாவது ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. இம்முறை அகவிலைப்படி 5% வரை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.