மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ ஹைக், டிஏ அரியர்.. இரண்டும் வருமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்க உள்ளது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும்.
சமீபத்தில் வெளிவந்த டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் மூலம் அகவிலைப்படி நான்கு சதவீதம் உயரும் என்பது தெளிவாகியுள்ளது. தற்போது ஊழியர்கள் 46 சதவீதம் அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள்
அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 சதவீதமாக அதிகரிக்கும்
இது தவிர கொரோனா பெருந்தொற்றின் போது முடக்கப்பட்ட டிஏ -வின் நிலுவைத் தொகையையும் அரசு விரைவில் வெளியிடும் என்றும் அதற்கான அறிவிப்பும் வெளியிடப்படும் என்றும் வட்டாரங்கள் கூறுகின்றன
கொரோனா பெருந்தொற்றின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை அகவிலைப்படி முடக்கப்பட்டது. அதன் பிறகு நிலமை சற்று சரியானவுடன் இந்த முடக்கம் நீக்கப்பட்டது.
எனினும் முடக்கப்பட்ட 18 மாதங்களுக்கான அகவிலைப்படி அரியர் தொகை இன்னும் அழைக்கப்படவில்லை. அதை இப்போது அரசு அளிக்கலாம் என்று ஊகங்கள் பரவி வருகின்றன
எனினும் அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்னும் அரசாங்கம் வெளியிடவில்லை.