மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் மெகா உயர்வு: மீண்டும் 0 ஆகும் அகவிலைப்படி

Sat, 25 May 2024-6:11 pm,

2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசாங்கம் அகவிலைப்படியை (DA) 4% உயர்த்தியுள்ளது. இந்த உயர்வின் காரணமாக அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 50% ஐ எட்டியது. இதைத் தொடர்ந்து அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும் என்ற கோணத்தில் பேசப்பட்டு வருகின்றது. 

2004 ஆம் ஆண்டில், 5வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு, அகவிலைபப்டி 50% -ஐ எட்டிய போது, அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் டிஏ இணைக்கப்பட்டது. இருப்பினும், பின்னர் 6வது மற்றும் 7வது ஊதியக் குழுக்கள் அத்தகைய நடவடிக்கை எதையும் பரிந்துரைக்கவில்லை.

கடந்த மார்ச் மாதம் டிஏ உயர்வு (DA Hike) அறிவிக்கப்பட்டு அகவிலைபப்டி 50% -ஐ எட்டிய போது, அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் தானாக இணைக்கப்படுமா என்ற கோணத்தில் ஊடக அறிக்கைகள் வெளிவந்தன. இதற்கு பதிலளித்த அரசு அதிகாரிகள், இந்த கட்டத்தில் அடிப்படை ஊதியத்தில் டிஏ தாமாக இணைக்கப்படாது என்று கூறி அதற்கான காரணங்களையும் விளக்கினார்கள். 

அகவிலைப்படி 50% வரம்பை அடைந்த பிறகு, முன்பு செய்தது போல், அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று பல ஊழியர் அமைப்புகள் நீண்ட காலமாக கோரி வருகின்றன. ஜூலை 2024 முதல் அரசாங்கம் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். ஜனவரி மாத உயர்வுக்குப் பிறகு DA தற்போது 50% ஆக உள்ளது, 50% அளவை மீறவில்லை. ஆகையால் 50% வரம்பு மீறப்பட்டவுடன், அதாவது அகவிலைபப்டி 50% -க்கு மேல் போனால்தான் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 

ஜூலை உயர்வுக்குப் பிறகு, டிஏ (DA) அடிப்படை ஊதிய அளவில் 50% ஐத் தாண்டும். ஆகையால், ஜூன் 2024 இல் மக்களவைத் தேர்தல் (Lok Sabha Elections) முடிவுகளுக்கு பிறகு மையத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு டிஏ-அடிப்படை ஊதிய இணைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம். அகவிலைபப்டி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்ட பிறகு, ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50% ஆன பிறகு, குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியம் உள்ளிட்ட சில கொடுப்பனவுகள் தாமாகவே 25% வரை திருத்தப்பட்டன. பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) குழந்தைகளுக்கான கல்விக் கொடுப்பனவு மற்றும் விடுதி மானியத்தின் வரம்புகள், அகவிலைப்படி 50% -ஐ எட்டும்போதெல்லாம் தானாகவே 25% உயர்த்தப்படும் என்று கூறியது.

 

இபிஎஃப்ஓ (EPFO) கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவில், ஓய்வூதிய கிராஜுவிட்டி மற்றும் இறப்பு கிராஜுவிட்டியின் அதிகபட்ச வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக 25% உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஜனவரி 1, 2024 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 50% ஆக மாற்றியமைக்கப்பட்டதன் காரணமாக இந்த பணிக்கொடை உயர்வு அறிவிக்கப்பட்டது. 

ஒரு வாரத்திற்குப் பிறகு, மே 7 அன்று, ஓய்வூதிய நிதி அமைப்பு மற்றொரு சுற்றறிக்கையை வெளியிட்டது. டிஏ அதிகரிப்பின் காரணமாக பணிக்கொடையை உயர்த்துவது தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அதிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் இந்த முடிவுக்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

 ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR), ஏஐசிபிஐ குறியீடு, அதாவது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI Index) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. DA மற்றும் DR ஐ ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசாங்கம் திருத்துகிறது. சமீபத்தில், மத்திய அரசு DA மற்றும் DR இல் 4% அதிகரிப்பை அறிவித்தது. அதன் பிறகு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50% ஆக உயர்ந்தது. 

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link