அதிரடியாய் தொடங்கிய 2025: அகவிலைப்படி உயர்வால் எகிறப்போகும் சம்பளம்

Fri, 03 Jan 2025-11:24 am,

புத்தாண்டு 2025 மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பான செய்திகளை கொண்டு வந்துள்ளது. அகவிலைப்படி (டிஏ) உயர்வுக்காக மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 7வது ஊதியக் குழுவின் கீழ், ஏஐசிபிஐ (அனைத்து இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) எண்களின் அடிப்படையில் டிஏ கணக்கிடப்படுகிறது.

 

இந்த முறை ஜூலை முதல் டிசம்பர் 2024 வரையிலான AICPI குறியீட்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அகவிலைப்படி தீர்மானிக்கப்படும். அக்டோபர் 2024 வரை வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ஜனவரி 2025 இல் டிஏ 3% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. 

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வர வேண்டும். இதன் பிறகுதான் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தில் (Dearness Relief) எவ்வளவு ஏற்றம் இருக்கும் என்பது தெளிவாகும். நவம்பர் மற்றும் டிசம்பர் 2024 இல் இந்த எண்ணிக்கை 145 ஆக இருந்தால், ஜனவரி 2025 இல் டிஏ 56% ஆக அதிகரிக்கும்.

ஏஐசிபிஐ (அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) மத்திய அரசு ஊழியர்களின் டிஏ உயர்வுக்கான முக்கிய அடிப்படையாகும். அக்டோபர் 2024 இன் தரவுகளின்படி, குறியீடு 144.5 புள்ளிகளை எட்டியுள்ளது. இதன் மூலம் புதிய ஆண்டில் அகவிலைப்படி 53% இல் இருந்து 56% ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகின்றது.

சம்பள உயர்வு: ஜனவரியில் டிஏ 3% அதிகரித்து 56% ஆனால், மாத அகவிலைபப்டி = ரூ.18,000 x 56% = ரூ.10,080. தற்போதைய அகவிலைபப்டி =  ரூ.18,000 x 53% = ரூ.9,540. வித்தியாசம்: ஒவ்வொரு மாதமும் ரூ.540, ஆண்டுக்கு ரூ.6,480. அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 உள்ள ஊழியர்களுக்கு டிஏ 3% உயர்ந்தால், டிஏ அதிகரிப்பு ரூ.7,500 ஆக இருக்கும். இந்த உயர்வு தொழிலாளர்களுக்கு நிதி உதவி மற்றும் மேம்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும்.

ஓய்வூதிய உயர்வு: மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போதைய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000. அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000. அகவிலை நிவாரணம் 3% உயர்ந்தால், இவை முறையே மாதம் ரூ.270 மற்றும் ரூ.3,750 அதிகரிக்கும்.

7வது ஊதியக் குழுவின் கீழ், ஆண்டுக்கு இருமுறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்படுகின்றது. இந்த திருத்தம் AICPI குறியீட்டின் சராசரியை அடிப்படையாகக் கொண்டது.

7வது ஊதியக்குழு: செப்டம்பர் 2024 இல், AICPI எண்ணிக்கை 143.7 ஆக இருந்தது. அக்டோபர் 2024 இல், இது 144.5 ஐ எட்டியது. இதனால் டிஏ மதிப்பெண் 55.05% க்கு அருகில் வந்தது. 2024 நவம்பரில் 1 புள்ளி அதிகரித்தாலும், மொத்த எண்ணிக்கை 145.5 ஐ எட்டும், இந்த சூழ்நிலையில் டிஏ 55.63% ஐ எட்டும். அதே சமயம் டிசம்பரில் குறியீட்டு எண் 0.50 புள்ளிகள் அதிகரித்தால், AICPI எண்ணிக்கை 146 புள்ளிகளாக இருக்கும். இந்த நிலையில் அகவிலைப்படி 56.29 சதவீதமாக உயரும். இருப்பினும், இவை அனைத்தும் டிசம்பரில் வெளியிடப்படும் தரவுகளைப் பொறுத்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டுக்கான எதிர்பார்ப்பும் உள்ளது. ஜனவரியில் அகவிலைப்படி உயர்வு தவிர, பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் மத்திய ஊழியர்களுக்கான புதிய அறிவிப்புகள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றில் 18 மாத டிஏ அரியர் (18 Months DA Arrears) தொகை பற்றிய அறிவிப்பு மிக முக்கியமானது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த முறையான அறிவிப்பு பொதுவாக மார்ச் மாதத்தில் வெளியிடப்படும். இருப்பினும், இறுதி புள்ளிவிவரங்கள் கிடைக்கும் வரை, அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்று சொல்வது கடினம். அறிவிப்பு எப்போது வந்தாலும், ஜனவரி முதலான டிஏ அரியர் தொகை ஊழியர்களுக்கு கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link