7th Pay Commission: ஜனவரிக்கு முன்பு 53% DA அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா?
மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 3% சமீபத்தில் உயர்த்தியது. ஜூலை 1 முதல் அமலுக்கு வந்த இந்த உயர்வு, டிசம்பர் 2024 வரை அமலில் இருக்கும்.
அகவிலைப்படி 53% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் அடிப்படை சம்பளத்துடன் DA இணைப்பது பற்றி பேச்சுக்கள் எழுந்துள்ளது. இதற்கு முன்பு அகவிலைப்படி 50% தாண்டிய பொழுது, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டது.
இதன் காரணமாக மக்கள் அகவிலைப்படி மீண்டும், அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்று எதிர்பார்க்கின்றனர். ஒருவேளை அரசு இணைத்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும்.
அரசு இது குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. அதாவது அகவிலைப்படி 50% கடந்தாலும், அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.
அரசு அடுத்த அகவிலைப்படி அறிவிப்பை எப்போது வெளியிடும் என்று ஊழியர்கள் ஆர்வமாக பார்த்து கொண்டு உள்ளனர். பொதுவாக இந்த அறிவிப்பு மார்ச் மாதமும், அக்டோபர் மாதமும் இருக்கும்.
அதன்படி அடுத்த டிஏ உயர்வு மார்ச் 2025ல் அறிவிக்கப்பட உள்ளது. நிலுவை தொகையுடன் ஜனவரி 2025 முதல் அமலுக்கு வரும்.