ஒருவர் உங்களை பார்த்துக்கொண்டே இருந்தால் ‘இது’தான் அர்த்தம்! என்ன தெரியுமா?
மரியாதை:
ஒருவர் பேசுகையில், அவரை கண்ணோடு கண் பார்ப்பது நம் கலாச்சாரத்தில் மரியாதையாக பார்க்கப்படுகிறது. எனவே, ஒருவர் உங்களுடன் ஐ காண்டேக் வைத்துக்கொள்கிறார் என்றால் அது மரியாதை நிமித்தமாக இருக்கலாம்.
பதற்றம்:
ஒரு சிலர், தங்களுக்குள் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக கூட எதேச்சியாக ஒருவரின் கண்ணோடு கண் பார்க்கலாம்.
கேட்பது:
ஒருவர், நீங்கள் பேசும் போது உங்கள் கண்களை பார்த்துக்கொண்டே இருக்கிறார் என்றால், அவர் நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
பிடித்தம்:
ஆண் பெண் மீதோ, பெண் ஆண் மீதோ ஈர்க்கப்படும் போதும், இப்படி கண்ணோடு கண் பார்க்கும் படலம் ஆரம்பிக்கலாம்.
காதல் மொழி:
ஒருவர், உங்கள் மீது காதல் கொண்டிருக்கிறார் என்றால் அவர் உங்கள் கண்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
ஆர்வம்:
நீங்கள் பேசும் விஷயங்கள் மீது, அல்லது உங்கள் மீது ஒருவருக்கு ஆர்வம் இருக்கிறது என்றால், அவரது கண்களை நீங்கள் அடிக்கடி சந்திக்க நேரும்.
இணைப்பு:
ஒருவர், ஏதேனும் உங்களிடம் சொல்ல முயற்சிக்கிறார் என்றாலோ, அல்லது உங்களுடன் ஏதேனும் ஒரு இணைப்பை உணருகிறார் என்றாலோ, ஐ காண்டேக்ட் நடக்கும்.
தைரியம்:
ஒருவர், தைரியமாக உணருகிறார் என்றால் அவர் உங்களை கண்ணோடு கண் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.