8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்

Sun, 23 Jun 2024-10:25 am,

மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான எண்டிஎ அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது. புதிய அரசிடமிருந்து மக்களுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மத்திய அரசு உழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் சில குறிப்பிட்ட அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். ஜூலை மாத அகவிலைப்படி திருத்தம், 8வது ஊதியக்குழு ஆகியவை இவற்றில் முக்கியமானவையாக உள்ளன. 

8வது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதுகுறித்து, தேசிய கவுன்சில், கேபினட் செயலர் ராஜீவ் கவுபாவுக்கு கடிதம் எழுதி, 8வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும் என, அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

8வது ஊதியக்குழு ஏன் தேவை என்பது குறித்து கூறிய தேசிய கவுன்சிலின் கோபால் மிஸ்ரா, 'கோவிட்-19க்கு பிந்தைய பணவீக்கம் கோவிட்-க்கு முந்தைய பணவீக்கத்தை விட அதிகமாக உள்ளது. 2016 முதல் 2023 வரை அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பொருட்களின் சில்லறை விலையை ஒப்பிட்டுப் பார்த்தால், அவை 80 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. ஜூலை 1, 2023 நிலவரப்படி, 46 சதவீத அகவிலைப்படி (DA) மட்டுமே வழங்கப்பட்டது. ஆகையால் உண்மையான விலை உயர்வுக்கும், ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் டிஏவுக்கும் வித்தியாசம் உள்ளது.' என்றார். 

பொதுவாக 10 வருடங்களுக்கு ஒரு முறை அரசாங்கம் புதிய ஊதியக்கமிஷனை அமைக்கிறது. இந்த ஆணையம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பு, அலவன்ஸ் மற்றும் சலுகைகளை மதிப்பாய்வு செய்கிறது. பணவீக்கம் போன்ற வெளிப்புற காரணிகளை மனதில் கொண்டு சம்பளம், கொடுப்பனவுகள் அல்லது சலுகைகளில் தேவையான மாற்றங்களை இது முன்மொழிகிறது.

28 பிப்ரவரி 2014 அன்று, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 7வது ஊதியக் குழுவை அமைத்தார். இந்த ஊதியக் குழு தனது அறிக்கையை 19 நவம்பர் 2015 அன்று அரசிடம் சமர்ப்பித்தது. இதற்குப் பிறகு, ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் அமல்படுத்தப்பட்டன.

8வது ஊதியக் குழுவை அமைக்க அரசு இப்போது ஒப்புதல் அளித்தால், அது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும். இந்த ஊதியக் குழு அறிக்கையைத் தயாரிக்க சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம். எனினும், அரசு அடுத்த ஊதியக்குழுவை அமைக்கும் அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்கு ஒன்றரை முதல் இரண்டு ஆண்டு காலம் ஆகும் என்பதால், இதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, இதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. 

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, தற்போது மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) 50 சதவிகித அகவிலைப்படியை (Dearness Allowance) பெற்று வருகிறார்கள். ஜூலை 2024 முதல் இதில் 4% அல்லது 5% ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) தரவுகளின் அடிப்படையில் இது உயர்த்தப்படும்.

8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 7வது ஊதியக் குழு 2.57 மடங்கு ஃபிட்மென்ட் ஃபாக்டரை அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக 2016 இல் ஊழியர்களுக்கு சராசரியாக 14.29% சம்பள உயர்வு ஏற்பட்டது. இதனால், குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

7வது ஊதியக்குழுவில், ஊழியர்கள் தரப்பில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68% ஆக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டாலும், 7வது ஊதியக்குழு 2.57%க்கு மட்டுமே பரிந்துரை செய்தது. இப்போது, 8வது ஊதியக்குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68% ஆக அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18,000 -லிருந்து ரூ. 26,000 ஆக அதிகரிக்கலாம். இது சுமார் 44% ஊதிய உயர்வை அளிக்கும். 

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link